நடிகை நயன்தாரா யாருடன் தீபாவளி கொண்டாடி இருக்கிறார் தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை நயன்தாரா இந்த தீபாவளியை விக்கி மற்றும் தனது அன்பு குழந்தைகளுடன் மட்டுமன்றி, பிரபல நடிகரின் குடும்பத்துடன் கொண்டாயுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நயன்ராரா - விக்கி
தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்தமான காதல் ஜோடியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருக்கிறார்கள். நானும் ரௌடி திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர்.
அதன்பின் 6 ஆண்டுகள் இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணமான அதே ஆண்டு வாடகை தாய் மூலம் நடிகை நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.தயானபிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தமிழ் சினிமா நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா அறியப்படுகின்றார்.
சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.
இந்நிலையில், சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மன ஷங்கர வரபிரசாத் திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இந்த தீயாவளியை நடிகர் சிரஞ்சீவி குடும்பத்துடன் இணைந்து நயன் குடும்பம் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |