Viral Video: கொடூரமாக மோதிக்கொண்ட இரு யானைகள்
கர்நாடகாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குடகு மாவட்டத்தில் உள்ள துபாரே யானைகள் முகாமில் இரண்டு யானைகள் கொடூரமாக மோதிக்கொண்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வைரல் காணொளி
கர்நாடகாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குடகு மாவட்டத்தில் உள்ள துபாரே யானைகள் முகாமில் எதிர்பாராத விதமாக யானைகளுக்கிடையான ஒரு விபத்து ஒரு உயிரை பறித்துள்ளது.
சுற்றுலாப்பயணிகள் யானைகள் குளிப்பதைப் பார்க்கச் சென்ற இடத்தில் இரு யானைகள் திடீரென மோதிக்கொண்ட கோர விபத்தில் சென்னையைச் சேர்ந்த 33 வயது ஜூனேஷி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த யானைகள் மோதிக்கொள்ளும் காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து உள்ளது.
யானைகளின் கொடூர தாக்கம்
யானைகள் முகாமில் வழக்கமாக யானைகளை குளிக்க வைக்கும் நிகழ்வு நடந்துகொண்டிருந்தது. ஏற்கனவே அந்த ஆற்றில் 'ஜெய் மார்த்தாண்டா' (38) என்ற யானை குளித்துக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் அங்கு தண்ணீர் குடிக்க 'கஞ்சன்' (27) என்ற யானை வந்துள்ளது.
யாரும் எதிர்பார்க்கவில்லை கஞ்சன் யானை திடீரென ஜெய் மார்த்தாண்டா யானையை ஆக்ரோஷமாகத் தாக்கியது. ஜெய் மார்த்தாண்டா யானைக்கு தந்தங்கள் கிடையாது. இதனால் கஞ்சன் யானையின் தாக்கத்தால் மார்தாண்டா யானை ஆற்றிகுள்ளே விழுந்தது.

அப்போதும் விடாத கஞ்சன் யானை மார்தாண்டா யானையை துரத்த ஆரம்பித்தது. இதனால் பயந்துபோன ஜெய் மார்த்தாண்டா யானை ஆற்றை விட்டு வெளியேறி, சுற்றுலாப் பயணிகள் நின்றிருந்த பகுதியை நோக்கி அலறியடித்துக் ஓடியது.
இந்த யானைகளை யானை பாகன்களால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆற்றில் இருந்த சுற்றுலா பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். கூட்ட நெரிசலில் தப்பி ஓட முயன்ற ஜூனேஷி என்ற பெண் ஓட முடியாமல் நிலைதடுமாறி தரையில் விழுந்தார்.
அப்போது பயந்து ஓடிவந்த மார்த்தாண்டா யானை ஜூனேஷி மீது விழுந்தது. யானையின் எடையை தாங்க முடியாமல் சம்பவ இடத்திலேயே அந்த பெண் நசுங்கி எலும்பு நொறுங்கி உயிர்துறந்தார்.
காணொளியினை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |