ராஜநாகம் முட்டையிலிருந்து வெளிவருவதை பார்த்திருக்கிறீர்களா? வைரலாகும் காணொளி
பாம்புகளின் ராஜாவான இராஜ நாகத்தின் குட்டி அதன் முட்டையில் இருந்து வெளிவரும் மெய்சிலிர்க்கும் காட்சி ஒன்று தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

வைரல் காணொளி
பூமியில் காணப்படும் மிகவும் பொதுவான விஷமுள்ள உயிரினங்கள் பாம்புகளே. குறிப்பாக, ராஜநாகம் என்றாலே பலரும் அச்சத்தில் நடுங்குவார்கள்.
ஆனால், ஒரு ராஜநாகம் முட்டையில் இருந்து வருவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அந்த வகையில் முட்டையிலிருந்து ஒரு ராஜநாகம் வெளிவரும் பரபரப்பான வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்தக் காணொளியில், ஒரு ஆணின் உள்ளங்கையில் உள்ள முட்டையிலிருந்து ஒரு ராஜநாகக் குட்டி வெளிவருவதைக் காணலாம்.
பொதுவாக மக்கள் பூனைகள், நாய்கள் அல்லது பசுக்கள் குட்டி ஈனுவதைப் பார்த்து ரசிப்பார்கள். ஆனால் பாம்பின் முட்டையில் இருந்து வரும் இந்த பாம்புக்குட்டியின் இந்த காணொளி மிகவும் வித்தியாசமானது.

இயற்கையின் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றின் வாழ்க்கையின் ஆரம்ப தருணங்களைக் காட்டும் இந்தக் காணொளி, தற்போது இணையப் பயனர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
The birth of a baby cobra pic.twitter.com/DA8PnbGv1Y
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) August 15, 2024
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |