அழாதே... நாங்க இருக்கோம்... கீழே தள்ளிவிடப்பட்ட குட்டி யானை மீட்டு சமாதானப்படுத்திய பெரிய யானைகள்!
கீழே தள்ளி விடப்பட்ட குட்டி யானையை மீட்டு ஆறுதல்படுத்திய பெரிய யானைகளின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குட்டி யானையை சமாதானப்படுத்திய பெரிய யானைகள்
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும்.
குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன. குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.
நம் வீட்டில் பேரக் குழந்தைகளை பெற்றோர்கள் அடித்துவிட்டால், உடனே தாத்தா, பாட்டி ஓடி வந்து பேரக்குழந்தைகளை சமாதானப்படுத்துவார்கள். அப்படித்தான் இங்கு ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
காட்டில் கூட்டத்தில் ஒரு பெரிய யானை குட்டி யானை தாக்கி கீழே தள்ளி விடுகிறது. கீழே விழுந்த குட்டி யானை சத்தமிட்டு அழுகிறது. உடனே 3 பெரிய யானைகள் ஓடி வந்து அந்த குட்டி யானையை பாதுகாத்து, எழுந்திருக்க உதவி செய்கிறது. பின்னர், தன் தும்பிக்கையால் அந்த குட்டி யானையை தடவிக்கொடுத்து ஆறுதல் படுத்துகிறது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியத்தில் வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Elephant attacks her sibling. A group of three mother elephants rush to his aid after he cries in pain pic.twitter.com/zkauaRlals
— Domenico (@AvatarDomy) May 4, 2023