தன்னை காப்பாற்றியவர் பின்னாலேயே ஓடி வந்த குட்டியானை - வைரலாகும் க்யூட் வீடியோ
தன்னை காப்பாற்றியவர்கள் பின்னாலேயே ஓடி வந்த குட்டியானையின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தன்னை காப்பாற்றியவர்கள் பின்னாலேயே ஓடி வந்த குட்டியானை
யானைகள் நாம் அனைவரும் நேசிக்கும் ஒரு மென்மையான விலங்கு. அதை விட அதன் குட்டி யானைகள் இன்னும் சிறந்தவை. குட்டி யானை பிறக்கும் போது 3 அடி உயரத்தில் பிறக்கும். இதனையடுத்து, 3 மாதங்களுக்குப் பிறகு விகாரமாக வளரத் தொடங்கும்.
இணையதளங்களில் அவ்வப்போது வெளியாகும் குட்டி யானையின் சேட்டைகள் நெட்டிசன்களின் மனதை கவர்ந்து விடும். அதன் குறும்புத்தனம், குளியல் போடும் காட்சிகள், விளையாடும் காட்சிகள் அனைத்தும் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி விடும்.
அப்படித்தான் இந்த வீடியோவில் வரும் ஒரு குட்டி யானை தன்னை காப்பாற்றியவர் பின்னால் ஓடிய சம்பவம் நெட்டிசன்களிடையே நெகிழ்ச்சியை வரவழைத்துள்ளது.
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், குட்டி யானை ஒன்று சிறு குட்டை நீர் குளத்தில் விழுந்து விட்டது. தாய் யானை காப்பாற்ற முயன்றும்கூட அந்த குட்டியானையால் வெளியே வர முடியவில்லை. அப்போது, அப்பகுதியில் ஜீப்பில் விரைந்த வனத்துறையினர் அந்த குட்டியானையை மீட்க முயற்சி செய்தனர்.
ஆனால், ஒரு ஜீப்பை தாய் யானை துரத்தி செல்ல, இன்னொரு ஜீப்பிலிருந்து இறங்கிய ஒரு நபர் குளத்தில் சிக்கிய குட்டிய யானையை மீட்டு வெளியே விடுகிறார். தாய் யானை வருவதற்குள் அவர் ஜீப்பில் ஓடிச் சென்று ஏறுகிறார். ஆனால், குட்டியானை ஓடிய அந்த நபர் பின்னாலேயே ஓடியது.
அந்த ஜீப் எங்கு செல்கிறதோ அந்த நபரை நோக்கி ஜீப் பின்னாலேயே ஓடிச் சென்றது. இதைப் பார்த்த தாய் யானையும் தன் குட்டியை பிடிக்க பின்னாலேயே ஓடி வந்தது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே நெகிழ்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Wonderful! Rangers Rescue a baby elephant from drowning.#zurutsavoeast #zurunakws #zurukenyaparks
— KWS Tsavo East National Park (@KWSTsavoEast) April 29, 2023
?handlebarhetzel pic.twitter.com/qpClN29hYg