வேலிக்குள் விழுந்த குழந்தையின் காலணியை எடுத்து கொடுத்த யானை - வைரலாகும் வீடியோ
வேலிக்குள் விழுந்த குழந்தையின் காலணியை எடுத்து கொடுத்த யானையின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
காலணியை எடுத்து கொடுத்த யானை
சில நேரங்களில் மனிதர்களை மிஞ்சும் அளவிற்கு விலங்குகள் செய்யும் செயல் ஆச்சரியத்தை வரவழைத்து விடுகின்றன. தன்னை காப்பாற்றியவருக்கு நன்றி சொல்லுதல், தன்னை சீண்டியவர்களை அடித்து நொறுக்குதல் போன்ற உணர்வுகள் விலங்குகளுக்கு இருப்பதை சமூகவலைத்தளங்களில் வெளியாகும் ஒவ்வொரு வீடியோவிலும் பார்க்க முடிகிறது.
மனிதர்களுக்குத்தான் அறிவு, பாசம், உணர்வு இருக்கிறது என்பது இல்லை. 5 அறிவு கொண்ட விலங்குகளுக்கும் அது உள்ளது என்பதை ஒரு யானை நிரூபித்துக் காட்டியுள்ளது.
குறித்த வீடியோவில், ஒரு குழந்தையின் காலணி மிருகக்காட்சி சாலையின் அடைப்பில் விழுந்தது. அதைப் பார்த்த யானை ஒன்று அந்த குழந்தையின் காலணியை தன் தும்பிக்கையால் எடுத்து அவர்களிடம் கொடுத்தது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பார்வையாளர் வியப்பில் ஆஹா... யானைக்கு இப்படிப்பட்ட ஒரு அறிவா? என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
?Elephant returns a child's shoe that fell into zoo enclosure pic.twitter.com/oTuL2ZxJOR
— Videos You Scroll Internet For (@ScrollVideos) April 22, 2023