தென்னிந்தியாவில் எந்தெந்த பிரியாணி வகைகள் பிரபலம்னு தெரியுமா? இதோ லிஸ்ட்
தென்னிந்தியாவில் எந்த பிரியாணி மிகவும் பிரபலமானது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பிரியாணி
பிரியாணி என்ற பெயரைக் கேட்டாலே அசைவ பிரியர்களில் வாயிலிருந்து உமிழ்நீர் ஊற ஆரம்பித்துவிடும். அந்த அளவிற்கு அசைவ பிரியர்களை கட்டுப்போட்டு வைத்திருக்கின்றது பிரியாணி.
பிரியாணி சாப்பாடு என்றால் அதற்கென தனி வயிறை வைத்திருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். பிரியாணியில் பல வகைகள் உள்ளது.
வெஜ் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி, சிக்கன், மட்டன், இறால் என பல தனித்தன்மையான ரெசிபிகளுடன் சமைக்கப்படுகிறது.
பிரியாணி ஈரானில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் சிலர் புலாவின் வழித்தோன்றல் என்றும் லக்னோவின் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உணவளிக்க செய்யப்பட்ட பிரியாணி என்று ஒருசாரார் கூறுகின்றனர்.
தற்போது தென்னிந்தியாவில் எந்த பிரியாணி பிரபலமானது என்பதை தெரிந்து கொள்வோம்.
ஹைதராபாத் பிரியாணி
ஹைதராபாத்திற்கு பெருமை சேர்ப்பது இந்த பிரியாணி தான். இது பாஸ்மதி அரிசி, பிரியாணி மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. இதன் நறுமணமும் சுவையும் வேற லெவல் என்று தான் கூற வேண்டும்.
தலசேரி பிரியாணி
கேரளாவில் மிகவும் பிரபலமான பிரியாணியில் இதுவும் ஒன்றாகும். இது பாஸ்மதி அரிசிக்கு பதிலாக ஜீரா அரிசி கொண்டு தயாரிக்கப்படுகின்றது. இந்த அரிசியானது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலம் ஆகும்.
மலபார் பிரியாணி
கேரளாவில் மலபார் பகுதியில் ஜீரா அரிசி, பிரியாணி மசாலா மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து இந்த பிரியாணி தயாரிக்கப்படுகின்றது.
கோழிக்கோடு பிரியாணி
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த பிரியாணியானது மிகவும் பிரபலம் ஆகும். இது பாஸ்மதி அரிசி மற்றும் பிற மசாலா கலவையுடன் இந்த பிரியாணி சமைக்கப்படுகின்றது.
ஆம்பூர் பிரியாணி
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இந்த பிரியாணி மிகவும் பிரபலமாகும். இது சீரக சம்பா அரிசி மற்றும் பிரியாணி மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றது.
செட்டிநாடு பிரியாணி
செட்டிநாடு பிரியாணிக்கு காரைக்குடி தான் மிகவும் பிரபலம் ஆகும். காரமான சுவையில், சம்பா அரிசி, பிரியாணி மசாலா பொருட்கள் கொண்டு இந்த பிரியாணி தயாரிக்கப்படுகின்றது.
திண்டுக்கல் பிரியாணி
தரமான பிரியாணி என்றாலே அது திண்டுக்கல் பிரியாணி ஆகும். இதன் சுவையும் நறுமணமும் அமோகமாக இருக்கும் இதனை, சீரக சம்பா அரிசி கொண்டு தயாரிக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |