Egg Masala Idli: இட்லி மீந்து போச்சா? அப்போ தூக்கி போடாதீங்க
பொதுவாகவே பாடசாலை செல்லும் மாணவர்களும் சரி அலுவலகம் செல்லும் பெரியவர்கலும் சரி காலை உணவை பெரும்பாலும் நேரமின்மை காரணமாக தவிர்த்து விடுகின்றனர்.
ஆனால் காலை உணவு அன்றைய தினத்திற்கான ஆற்றலை தருகிறது, காலை உணவில் அதிகளவில் புரதம், ஃபைபர் சேர்ந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குறிப்பாக காலை உணவில் முட்டை சேர்ப்பது ஆரோக்கியமானது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அந்தவகையில் இரவு மீந்து போன இட்லியை வைத்து மிகவும் எளிமையான முறையில் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த முட்டை இட்லி அவ்வாறு செய்யலாம் என இந்த பதிலில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி - 3
முட்டை - 2
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 தே.கரண்டி
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
கரம் மசாலா - 1/2 தே.கரண்டி
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
மிளகுத் தூள் - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் மீந்து போன இட்லிகளை உதிர்த்துக் ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
அதனையடுத்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகம் வரையில் நன்றான வதக்கி, அதனுடன் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு கிளறி விட்டு,தேவையாள அளவு உப்பு சேர்த்து, கரம் மசாலா தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
பின்னர் உதிர்த்து வைத்துள்ள இட்லியை சேர்த்து நன்றாக கரண்டியால் கலந்துவிட வேண்டும். கடைசியில் கொத்தமல்லி மற்றும் மிளகுத் தூளைத் தூவி இறக்கினால், அட்டகாசமான சுவையில் முட்டை இட்லி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |