குழந்தைகளுக்கு இருமல் மருந்து அதிகம் கொடுக்காதீங்க - இந்த பிரச்சனை வரும்
வீட்டில் சின்ன குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் அடிக்கடி வரும். இதற்காக பெற்றோர்கள் மருந்துகள் கைவசம் வைத்திருப்பார்கள்.
சிலர் இருப்பார்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் சின்னதாக ஒரு தும்மல் தும்மினாலும் உடனே ஒரு மூடி சிரப்பை வயாயை திறந்து ஊற்றி விடுவார்கள். அதிலும் டாக்டர் ஒரு மூடி கொடுக்க சொன்னால் சிரப் தானே என அளவிற்கு மீறி கொடுப்பார்கள்.
ஆனால் இதனால் பல தீமைகள் குழந்தைகளுக்கு வரும் என்பதை ஒரு பெற்றோரும் யோசித்து கூட பார்ப்பதில்லை.இருமல் மருந்து தானே கொஞ்சம் அதிகமாக கொடுத்தால் ஒன்றும் ஆகாது என்று நினைப்பவர்கள் தான் அதிகம்.
சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு தேவையான மருந்தை விட அதிகமாக கொடுக்கும் போது அது குழந்தைகளின் உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். பதிவில் அதை தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளின் உடல்நலம் பாதிப்பு
குழந்தைகளுக்கு நல்லது தான் செய்கிறோம் என நினைத்து பல தவறுகளை அம்மாக்கள் செய்கிறார்கள். அது முற்றிலும் தவறு. அவர்களுக்கும் கொஞ்சம் அறிவுரை கூற வேண்டியது கடமை.
பொதுவாக குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற பெரிய பிரச்சினைகள் வந்தால் அவாகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று வருவார்கள். அப்போது மருத்துவர் மருந்து கொடுப்பார்.
இங்கே தான் அம்மாக்களின் ட்விஸ்ட் இருக்கு. மருத்துவர் ஏதேனும் மருந்து எழுதி கொடுத்தால் அதை கூடுதலாக வாங்கி ஸ்ரொக் செய்து வைத்துக்கொள்வர்கள்.
அப்படி வைத்த மருந்துகளை குழந்தைகளுக்கு திரும்பவும் ஏதாவது காய்ச்சல் இருமல் என தெரிந்த உடனனேயே அவர்களாகவே அதை குழந்தைகளுக்கு ஊற்றி கொடுப்பார்கள்.
உடல்நிலை சரியில்லாமல் போனதற்கான காரணத்தை ஆராய்ந்து அதற்கு ஏற்ற மருந்தை தான் ஒவ்வொரு முறையும் கொடுக்க வேண்டும். ஆனால் அம்மாக்கள் அதை செய்ய தவறி விடுவார்கள்.

தேவையில்லாமல் இருமல் மருந்துகள் கொடுப்பதன் விளைவுகள்
குழந்தைகளுக்கு அதிகமாகவோ அல்லது தேவையற்ற நேரங்களிலோ மருந்துகள் கொடுக்கும்போது அதனாலும் சில விளைவுகள் ஏற்படும். மருந்துகள் தேவையில்லாமல் கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி அம்மாக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.
- மங்கலான பார்வை
- தலைசுற்றல்
- மனதில் குழப்பம்
- அதிகப்படியான வியர்வை
- வாந்தி
- குமட்டல்
- வயிற்று வலி
- உயர் ரத்த அழுத்தம்
- இதயத்துடிப்பு சீரற்றதாக இருத்தல்
- முகம் சிவந்து போவது
- பதட்டம்
- உடலில் ஆற்றல் இல்லாமல் உணர்வது
- ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம்.

இந்த பிரச்சனைகள் குழந்தைகளுக்கு வந்தால் கூட அதை நாம் கண்டுபிடிக்கும் வரை அவர்களுக்கு தெரியாது. எனவே நீங்கள் குழந்தைகளுக்கு இருமல் மருந்தை அடிக்கடி கொடுப்பதை நிறுத்தி விட்டு வெறு வழியில் சளி காய்ச்சல் இருமலை போக்க முயற்ச்சி செய்யுங்கள்.
அவர்களுக்கு டீ கொடுக்கிறீர்களா அதில் கொஞ்சம் இஞ்சி சேர்த்து கொடுங்கள். காலையில் இதமான சூட்டில் சூப் செய்து கொடுங்கள். சாதத்துடன் மிளகு ரசம் வைத்து கொடுங்கள்.
இதை எல்லாம் கொடுக்கும் போது முடிந்த அளவிற்கு அவர்களை சூடாக சாப்பிட வையுங்கள். உணவுகள் சூடாக கொடுங்கள். நன்றாக தண்ணீர் கொடுங்கள். இதை எல்லாம் பின்பற்றினால் அடிக்கடி வரும் நோய்கள் குழந்தைகளுக்கு தடைபடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |