கண்ணம்மாவிற்கு தெரியாமல் திருமணம்.. இறுதிகட்டத்தை நோக்கி பாரதி கண்ணம்மா 2!
கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்ட பாரதிக்கு சௌந்தர்யா இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார்.
பொதுவாக தற்போது சின்னத்திரை சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா 2.
முதல் பாகம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், இரண்டாம் பாகம் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
இரண்டாம் பாகம் சரியாக ரசிகர்கள் மத்தியில் இடம்பிடிக்காததால் சீரியலை பாதியில் நிறைவிற்கு கொண்டு வருகிறார்கள்.
வெண்பா - பாரதி திருமணம்
இந்த நிலையில், பாரதியின் அப்பாவை கொலை செய்து விட்டு கண்ணம்மா சிறையில் இருந்துள்ளார்.
இதனை சௌந்தர்யா - பாரதி முன் பொலிஸார் வீட்டிற்கே வந்து கூறியுள்ளார். இதனால் கடுப்பான பாரதி, கண்ணம்மாவை வீட்டை விட்டு வெளியில் அனுப்பியுள்ளார்.
கண்ணம்மா மீது எந்த விதமான தவறு செய்யவில்லை என நிரூபிப்பேன். என சவால் விட்டு வெளியில் சென்றுள்ளார்.
இந்த இடைவெளியை பயன்படுத்தி பாரதிக்கும் வெண்பாவிற்கும் திருமண ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
ஆனால் இது தெரியாமல் கண்ணம்மா கொலையாளியை தேடி வருகிறார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |