பாரதி கண்ணம்மா சீசன் 2: பிரிந்த இரட்டை குழந்தைகள்! மருத்துவராகவும், டிரைவராகவும் மாறியது எப்படி?
பாரதி கண்ணம்மா சீரியல் சீசன் 2 ஆரம்பமாகவுள்ளதாக ப்ரொமோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாரதி கண்ணம்மா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கணணம்மா சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் வெண்பாவின் சதியால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று பாரதியிடமும், ஒன்று கண்ணம்மாவிடமும் வாழ்ந்து வருகின்றது.
கடந்த வாரம் வெளியான ப்ரொமோ காட்சியில் ஹேமாவிடம் தனது அம்மா யார் என்பதை க்ணம்மா கிரங்கமாக போட்டு உடைத்தார்.
பின்பு ஹேமாவை தன்னுடனே தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மகிழ்ச்சியாக இருந்து வருகின்றார்.
சீசன் 2 உண்மையா?
இந்நிலையில் பாரதி கண்ணம்மாவின் சீசன் 2ம் பாகம் என்று கூறி இணையத்தில்் காணொளி ஒன்று பயங்கர வைரலாகி வருகின்றது.
அதாவது கண்ணம்மாவிடம் சேர்ந்த இரண்டு குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கையில், இவர்கள் சுற்றுலா செல்கின்றனர். இதனை தெரிந்து கொண்ட வென்பா அடியாட்களை அனுப்பி அவர்களை விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய கூறுகிறார்.
இந்த விபத்தின் போது கண்ணம்மாவிற்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில், குழந்தை இரண்டு பேரும் பிரிந்து வெவ்வேறு இடத்திற்கு செல்கின்றனர்.
இதில் ஹேமா ஆட்டோ டிரைவராகவும், லெஷ்மி மருத்துவராகவும் காணப்படுகின்றனர். லெஷ்மி வந்து கொண்டிருக்கும் கார் விபத்தில் சிக்கிய பின்பு அந்த இடத்திற்கு ஹேமா வருகின்றார்.
மயங்கி விழும் லெஷ்மியை தாங்கி பிடிக்கின்றார் என இக்காட்சி முடிகின்றது. ஆனால் இக்காட்சி எடிட் செய்யப்பட்டது என்று இணையத்தில் பலரும் கூறி வரும் நிலையில், உண்மையான நிலை உறுதியாக தெரியவில்லை.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்....