இனி மாங்கொட்டையை வீசாதிங்க.. இப்படி செய்து சாப்பிட்டால் நன்மைகள் ஏராளம்!
பொதுவாக மாம்பழம் நாம் எதிர்பார்க்காத பல நன்மைகளை எமக்கு தருகின்றது.
அந்த வகையில் மாம்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் என ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன.
இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக கொடுக்கலாம். மேலும் வைட்டமின் சி இதில் அதிகம் இருப்பதால் மாம்பழம் சாப்பிடுவதால் சரும பிரச்சினை ஏதும் ஏற்படாது.
அந்த வகையில், மாம்பழத்தில் இருக்கும் சத்துக்கள் பற்றி நமக்கு தெரியும். மாறாக மாம்பழத்தில் உள்ளே இருக்கும் கொட்டையில் என்ன இருக்கின்றது தெரியுமா?
மாம்பழ கொட்டையில் ஒளிந்திருக்கும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம். நாம் சாப்பிடும் மாங்காயை விட அதன் கொட்டையிலும் அதிகப்படியான ஊட்டசத்துகள் இருக்கின்றது. இந்த விடயம் பெரியதாக யாருக்கும் தெரிவதில்லை.
மேலும் மாங்காய் கொட்டையை சாப்பிடுவதால் இரத்த சோகை பாதிப்பு குறையும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
மாங்கொட்டை பொடியை தயாரிக்கும் முறை
மாங்காயை சாப்பிட்டு முடித்த பின்னர் அந்த கொட்டை எடுத்து நன்றாக காய விட வேண்டும்.
பின்னர் அதனை எடுத்து இரண்டாக பிளந்து பருப்பை எடுத்து, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
அதனை வாணலில் நெய் விட்டு அந்த கலவையை எடுத்து நெய் விட்டு, வறுத்து ஆறவைத்து பொடியாக அரைத்து ஒரு போத்தலில் போட்டு வைக்க வேண்டும்.
நாம் எப்போது வேண்டும் என்றாலும் தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்யும் போது நல்ல பயன் கிடைக்கும்.
நன்மைகள்
1. கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் கரு வளர்ச்சியடையும்.
2. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை சாப்பிட்டால் எடை இழப்பும் ஏற்படும்.
3. பற்கள் வலுப் பெறும்.
4. இதய நோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது
5. இரத்த சோகை பாதிப்பு குறையும்.