இந்த பழத்தின் கொட்டையை தூக்கி வீசாதீங்க... அதுல இவ்வளவு பிரச்சினைக்கும் மருந்து இருக்கு...
மாம்பழம் பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழம். இதில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இந்த மாம்பழ விதைகளிலும் பல நன்மைகள் உள்ளன. இந்த மா விதையை பழுத்த பிறகே இதை நம்மால் பயன்படுத்த முடியும். இதை பொடி செய்து எண்ணெய் அல்லது வெண்ணெய் வடிவத்தில் எடுக்க முடியும்.
மாங்காய் விதைகளில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம். மாம்பழ விதைகளில் உள்ள எத்தனால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவை குறைக்கக்கூடிய அண்டிடியாபடிக் பண்புகளையும் கொண்டுள்ளது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த மாங்காய் விதையிலிருந்து எடுக்கப்படும் சாற்றினை உட்கொள்வது, நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய நன்மை தருகிறது.
இந்த மாங்காய் விதையில் கொழுப்பின் அளவைக் குறைப்பதற்கும், உடலில் உள்ள கொழுப்பின் அளவை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான ஆற்றல் உள்ளது. இந்த மாங்காய் விதைகளில் உள்ள பாலிபினால் ஆக்சிஜனேற்ற செயல்பாடே இதற்கு காரணமாகும். உடல் எடையை குறைக்க இந்த மாங்காய் விதைகள் உதவுகின்றன. மாங்காய் விதைகளில் உள்ள குளுக்கோஸ் உடல் பருமனை குறைக்க உதவுகிறது.
இந்த மாங்காய் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் சாறினை உட்கொள்வதால் உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வழியாக இருக்கும். இது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. பாரம்பரியமாக வயிற்றுப்போக்கு பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த மாங்காய் விதை சாறு கொடுப்பது வழக்கம்.
ஒரு ஆராய்ச்சியில் மாங்காய் விதை சாறு ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது என தெரியவந்துள்ளது.
இந்த மாம்பழ விதைகளில் ஆக்சிஜனேற்றிகள், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் கல்லிக் அமிலங்கள் நிறைந்துள்ளன.
இந்த மாங்காய் விதை சாறுகளை உட்கொள்ளும்போது மார்பக புற்றுநோயினால் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் பண்பு உள்ளன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.