பப்பாளி விதைகளை சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
பப்பாளி பழத்தை விட பப்பாளி விதைகளில் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இது நமது உடலுக்கு பல சத்துக்களை தரும்.
பப்பாளி விதைகளின் நன்மைகள்
பப்பாளி பழத்தில் பல நன்மைகள் கிடைக்கின்றது. இதை நாம் எப்படி வேண்டுமானாலும் சாப்பிட முடியும். வைட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் இருக்கின்றது.
இது உடலுக்கு மிகவும் முக்கியமான வைட்டமின்களாகும். ஆனால் இந்த பழத்தில் உள்ள விதைகளை யாரும் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.
ஆனால் பப்பாளி விதைகளில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே பப்பாளி விதைகளில் இருக்கும் சத்துக்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வீக்கத்தைக் குறைக்க உதவும்
பொதுவாக பப்பாளி பழத்தில் உள்ள விதைகளில் பப்பேன் எனப்படும் நொதி உள்ளது. இது உடலில் செரிமானத்தை சீராக்கிறது. குடலில் வீக்க பிரச்சனை இருப்பவர்கள் இந்த விதைகளை சாப்பிட்டால் பிரச்சனை இல்லாமல் போகும்.
பப்பேன் ஒரு புரோட்டியோலிடிக் நொதி , அதாவது இது உங்கள் உடல் புரதத்தை ஜீரணிக்க உதவுகிறது. பப்பேன் செரிமான கோளாறுகள் அல்லது இரைப்பை குடல் தொந்தரவுகளை எதிர்த்துப் போராட உதவும்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன
பப்பாளி விதைகளில் வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் சி உங்கள் உடலில் கொலாஜன் உற்பத்தி செய்ய உதவுகிறது மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பொட்டாசியம் சிறுநீரகம் மற்றும் இதய செயல்பாட்டை பாதுகாப்பாக வைத்திருக்கும். மெக்னீசியம் உங்கள் உடல் தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை சீராக்க உதவும். கால்சியம் உங்கள் எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்துகிறது.
ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகள்
ஒட்டுண்ணி எதிர்ப்ணப பண்புகளில் பப்பாளி விதைகள் சிறந்த பங்கு வகிக்கிறது. இதனால் நம்மை அண்டி வரும் நோய்கள் எதிர்ப்பு சக்திகள் மூலம் இல்லாமல் செய்யப்படும். எனவே இதை நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை என நினைப்பவர்கள் பயன்படுத்தலாம்.
ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவை
பப்பாளி விதைகளில் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் உள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தை எதிர்க்க உதவும்.
இயற்கையான அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஆக்ஸிஜனேற்றிகள் சில நல்ல செல்களின் சேதத்தை இல்லாமல் செய்யும். இது ஆராய்ச்சி மூலமாக தெரியவந்துள்ளது.
பைட்டோ கெமிக்கல்
பப்பாளி விதைகளில் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளது. பைட்டோகெமிக்கல்கள் என்பவை தாவரங்களில் காணப்படும் சேர்மங்கள் ஆகும். இவை மனிதர்களுக்கு நன்மை செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளன.
இவை பெரும்பாலும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களாக செயல்படுகின்றன, இது நோய்களைத் தடுக்க உதவுகிறது. இதனால் இதய நோய், மூட்டுவலி, மற்றும் சில புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கூட நிவாரணம் தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |