சீரகம், கொத்தமல்லி தண்ணீர்: இரண்டில் எதில் நன்மை அதிகம்?
உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் காலை உணவில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் இருக்கும் பொழுது உடலில் வரும் நோய்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை எரிக்கவும், சாப்பிட்ட திருப்தியை ஏற்படுத்தவும் உள்ளிட்டவை சரியாக இருக்க வேண்டும் எனின் ஆரோக்கியமாக காலை உணவை தெரிவு செய்ய வேண்டும்.

Fish Kuzhambu: மீன் குழம்பை எத்தனை நாள் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்? இந்த தவறை மட்டும் செய்யக்கூடாது
நம்மிள் பலர் காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபியை முதலில் குடிப்பார்கள். அதன் பின்னர் காலை உணவு சாப்பிடுவார்கள். இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு கெடு வரலாம்.
காலையில் எழுந்தவுடன் மூலிகை பொருட்கள் போட்டு தண்ணீர் குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். இது உடல் ஆரோக்கியத்திலும் பங்களிப்பு செய்யும்.
அந்த வகையில் காலையில் பருக வேண்டிய பானங்களில் சீரக தண்ணீரும், கொத்தமல்லி தண்ணீரும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த இரண்டு பானங்களில் எந்த பானம் குடித்தால் பலன்கள் அதிகம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
சீரக தண்ணீர்
- ஒரு லிட்டர் சீரக தண்ணீரில் 7 கலோரிகள் உள்ளன. இதனால் கலோரியை குறைக்க நினைப்பவர்களுக்கு இதுவே சிறந்த வழியாக இருக்கும். அத்துடன் உடல் எடையையும் சரியாக நிர்வகிக்கும்.
- செரிமான நொதிகளுக்கு துண்டுதல் கொடுத்து செரிமான எளிதாக்கும். இதனால் மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்கள் சீரக தண்ணீர் குடிக்கலாம். சீரகத்தில் உள்ளடங்கி இருக்கும் பயோ ஆக்டிவ் சேர்மங்கள் வயிறு வீக்கத்தை குறைத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- சீரகத்தில் இருக்கும் பயோபிளவனாய்டுகள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்கிறது. அதே சமயம் கொழுப்பை எரித்து, உடல் ஆற்றலை ஊக்கப்படுத்துகிறது.
- சீரக தண்ணீரில் இன்சுலின் உணர்திறன் அதிகமாக இருக்கிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவை ஒழுங்கு செய்கிறது. சர்க்கரை அதிகரிக்கும் என்ற பயம் உள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபிக்கு பதிலாக குடிக்கலாம். கணைய ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.
கொத்தமல்லி தண்ணீர்
- கொத்தமல்லி தண்ணீரில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் சி மற்றும் ஈ போன்ற உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி புதிய வகையான நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும்.
- நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டி ஹார்மோன் சமநிலையை ஒழுங்குச் செய்யும்.
- அநேகமான பெண்களுக்கு வரும் மாதவிடாய் பிரச்சினையை எந்தவித சிக்கலும் இல்லாமல் சீர்ச் செய்கிறது. தைராய்டு ஆரோக்கியம் சரிச் செய்யப்படுகிறது.
- கொத்தமல்லியில் இருக்கும் டையூரிடிக் பண்புகள் நச்சுக்களை வெளியேற்றி, சிறுநீரகங்களையும் கல்லீரலையும் சுத்தம் செய்கிறது.
- கொத்தமல்லி தண்ணீர் சிறுநீர் உற்பத்தி அதிகரித்து, சிறுநீர் பையில் தேங்குவதை கட்டுபடுத்தும். இதனால் வயிறு வீக்கம் இருக்காது, ரத்தம் ஓட்டம் சீராக இருக்கும்.
எது சிறந்தது?
சீரக தண்ணீர், கொத்தமல்லி தண்ணீர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அது தனிப்பட்டவர்களின் விருப்பம். ஏனெனில் இரண்டும் உடலில் உள்ள அதிக கலோரிகளை எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் உதவியாக இருக்கிறது. திரவ மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சினையை எதிர்க் கொள்வதற்கு கொத்தமல்லி தண்ணீர் சிறந்தது.
தயாரிப்பு முறை
1. டேபிள்ஸ்பூன் சீரகம், லிட்டர் தண்ணீர் இரண்டையும் ஒன்றாக கலந்து முதல் நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் அந்த நீரை வடிகட்டி பருகினால் சிறந்த பலனை பெறலாம்.
2. கொத்தமல்லி தண்ணீர் தயாரிக்க வேண்டும் என்றாலும் அதே முறையில் தயாரித்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |