சத்தான முருங்கை அடை செய்வது எப்படி? அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க
முருங்கை கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ள நிலையில், இந்த கீரையை அடையாக எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முருங்கை கீரை
சத்துக்கள் அதிகம் கொண்ட முருங்கை கீரை ரத்த உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது. இதனை குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் அடையாக செய்து சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு நல்ல உணவாகவும், சத்து மிக்கதாகவும் இருக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும் முருக்கைகீரையில் பல சத்துக்கள் அதிகமாக இருக்கின்றது.
இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி கர்ப்பிணிகள் உட்பட அனைவருக்கும் மிகச்சிறந்த உணவாகும்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு - கால் கிலோ
இளம் முருங்கை கீரை - இரண்டு கைப்பிடி
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கியது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
செய்முறை
பச்சரிசி மாவுடன் முருங்கை கீரையையும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.
பின்பு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் மிதமாக விட்டு நன்றாக பிசையவும்.
மாவு ரொட்டி சுடும் பதத்திற்கு வந்த பின்பு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து அடையாக தட்டிக்கொள்ளவும்.
பின்பு தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாக போட்டு முன் மற்றும் பின் புறம் திருப்பி நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
அடை சுடுவதற்கு நல்லெண்ணெய் அல்லது நெய்யை பயன்படுத்தினால் கூடுதல் சுவையாக இருக்கும்.
பச்சை மிளகாயிற்கு பதிலாக வரமிளகாய் அல்லது அரைத்த சோம்பு பயன்படுத்தினால் வெவ்வேறு சுவை கிடைக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |