மாதவிடாய் காலத்தில் பப்பாளி சாப்பிட்டால் என்ன நடக்கும்: யாரெல்லாம் சாப்பிடலாம்?
மாதவிடாய் என்பது மாதம் மாதம் பெண்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சினைதான். இந்தக் காலத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பல உள்ளன.
இந்த நேரத்தில் என்னென்ன சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்றும் சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறோம்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, அதிக உதிரப் போக்கு காரணமாக உடலில் ஏற்படும் வலியை குறைக்க உதவும் உணவுகள் உள்ள அவற்றை தேர்தெடுத்து உண்ணுவதன் மூலம் சிறிய வலிகள் இல்லாமல் போகும்.
அதே போல மாதவிடாய் காலத்தில் பப்பாளி சாப்பிடலாமா? என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும்.
பழுக்காத பப்பாளியில் லேடெக்ஸ் மற்றும் பாப்பைன் நிறைந்துள்ளது. இதனை உண்பதால் கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளையும், கருப்பைச் சுருக்கத்தைத் தூண்டும்.
மேலும், மாதவிடாய் காலங்களிலும் பழுக்காத பப்பாளி சாப்பிடும் போது உங்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தும்
மாதவிடாய் காலத்தில் பப்பாளி பழம் சாப்பிட்டால்
- பப்பாளி கருப்பையின் தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
- வலி அல்லது பிடிப்புகளில் இருந்து நிவாரணம் பெற உதவும்
- மாதவிடாய் சுழற்சியை மேம்படுத்தும்
- பப்பாளி உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவைக் கட்டுப்படுத்தும்
-
பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருப்பையின் தசைகள் சுருங்க உதவும்