பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி தள்ளிப்போக முக்கிய காரணங்கள்
ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் ஆரோக்கியத்திற்கும், மனமகிழ்ச்சிக்கும் ஒரு முக்கியக் காரணமாகும்.
இருப்பினும், இன்றைய பெரும்பாலான இளைய தலைமுறையிடம், ஒழுங்கற்ற மாதவிடாய், வயிற்று வலி, மனநிலை மாற்றங்கள், கருவுறாமை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்றவை இயல்பாகி உள்ளது.
அந்த வகையில், பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போக சில முக்கியமான காரணங்களை பற்றி இங்கே பார்ப்போம்.
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்பது ஹார்மோன் ஆன ஆண்ட்ரோஜன் உங்கள் உடலில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் நிலையாகும்.
இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக, கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன. இது மாதவிடாயை ஒழுங்கற்றதாக மாற்றும்.
மேலும், இதை சரிசெய்ய உங்கள் சுழற்சியைக் கட்டுப்படுத்த உதவும் சரியான மருந்தை எடுத்துக்கொள்ளவேண்டும்.
மன அழுத்தம்
மன அழுத்தம் கூட உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம். நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோல் எனப்படும் ஹார்மோனை செயல்படுத்துகிறது.
இது மாதவிடாய் தாமதத்திற்கு அல்லது தவறவிடுவதற்கு வழிவகுக்கும்.
அதிகமான உடற்பயிற்சி
வழக்கமான உடற்பயிற்சி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க ஒரு சிறந்த வழியாகும்.
இவை, திடீரென எக்கச்சக்கமாக உடற்பயிற்சி செய்தால், அது ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்க வழிவகுக்கும், இது மாதவிடாயை பாதிக்கலாம்.
உடல் எடையின் மாற்றங்கள்
உங்கள் உடல் எடை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தாலும் உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம்.
பெரும்பாலும் இந்த இரண்டும் தான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும். இதை நீங்கள் எதிர்கொண்டால் நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.
தூக்கத்தில் மாற்றம்
சரியான நேரத்திற்கு உறங்க செல்லாமல் இருப்பது, வேறு நேர மண்டலத்திற்கு பயணம் செய்வதும் கூட மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம்.
காரமான உணவுகள்
பொரித்த உணவுகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் தவிர்க்க வேண்டும். அதிகப்படியான உப்பு உட்கொள்வது நீரை தக்கவைத்துக் கொள்வதற்கு காரணமாவதால், இது வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.
ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற சத்தான உணவை உட்கொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்த்துவிட வேண்டும்.
மெனோபாஸ்
மெனோபாஸ் என்பது பெண்களின் உடல் மற்றும் மன நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
இருப்பினும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் வாழ்க்கையை புதுப்பித்து, முழுமையாக வாழ முடியும்