மாதவிடாய் காலங்களில் அதிகமான இரத்தபோக்கு பிரச்சினை இருக்கிறதா? கவலை வேண்டாம்
பெண்களில் சிலருக்கு மாதவிடாய் காலப்பகுதியில் அதிகமான இரத்தபோக்கு இருக்கும்.
ஹார்மோன் சமநிலையின்மை காரணமாகவும், தைராய்டு சுரப்பில் பிரச்சனை இருப்பவர்களுக்கும் இதுபோன்ற இருக்கலாம்.
இதற்கான காரணங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
அதிக இரத்தப்போக்குக்கு காரணம்
1. கருப்பை நார்த்திசுக்கட்டி (Uterine fibroid) இது கர்ப்பபைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ கட்டி ஏற்பட்டால் உங்களுக்கு அதிக இரத்தப்போக்கும் அதிக வலியையும் ஏற்படுத்துவதுடன் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினையாக மாறும் ஆதலால் இதற்கு அதிக கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டும்.
2. அடினோமயோசிஸ் (Adenomyosis) பொதுவாக கருப்பையை வரிசைப்படுத்தும் திசு கருப்பையின் தசை சுவரில் வளரும் போது ஏற்படுகிறது.
திசுக்கள் அதிகமாக வளருவதால் வெளியில் வரும்போது அதிக இரத்தம் தேவைப்படுவதால் நமக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்படும்.
3. எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) கருப்பைக்கு வெளியே எண்டோமெட்ரியம் (கருப்பையின் புறணி) போன்ற திசுக்கள் இருப்பதால் வகைப்படுத்தப்படும் ஒரு நோயாகும்.
இது ஒரு நாள்பட்ட அழற்சி எதிர்வினையை ஏற்படுத்துகிறது. மேலதிக திசுக்கள் வளருவதால் இதனாலும் அதிக இரத்தப்போக்கு ஏற்படும்.
4.கருப்பை பாலிப்கள் (Endometrial polyps) என்பது உங்கள் கருப்பையின் உள் புறணியில் (எண்டோமெட்ரியம்) ஏற்படும் வளர்ச்சியாகும்.
அவை எண்டோமெட்ரியத்துடன் ஒரு மெல்லிய தண்டு அல்லது அகன்ற அடிப்பகுதியால் இணைக்கப்பட்டு உங்கள் கருப்பையில் உள்நோக்கி நீட்டிக்கப்படுகின்றன.
கருப்பை பாலிப்கள் பொதுவாக புற்றுநோயற்றவை, ஆனால் அவை சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மாதவிடாய் (மாதவிடாய்) அல்லது கருவுறுதல் ஆகியவற்றில் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
மாதவிடாய் காலங்களில் தவிர்க்க வேண்டியவை
மாதவிடாய் காலங்களில் நாம் உண்ணும் உணவில் அதிக கவனம் தேவை. குறிப்பாக அதிக உப்பு மற்றும் அதிக காரம் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
அதிக இனிப்பு உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் உண்ண கூடாது.
அதே போல், துரித உணவுகள், கொழுப்பு மிகுந்த இறைச்சி, சீஸ், கொழுப்பு மிகுந்த பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
முக்கிய குறிப்பு
உங்களுக்கு 6 அல்லது 7 நாட்களுக்கு மேல் இரத்தப்போக்கு தொடருமானால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுவது நல்லது.