இனி எடையைக் குறைப்பது பற்றி கவலை வேண்டாம்: பச்சைப் பயறு கொண்டு எடையை குறைக்கலாம்
பெரும்பாலானோருக்கு இப்போதுள்ள பிரச்சினை உடல் எடை அதிகரிப்பு தான். ஒரு சிலர் உடல் எடையை குறைக்க என்னென்னவோ செய்வார்கள் ஆனால், உடல் எடை குறைந்து இருக்காது.
உடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும் பலவித வழிகளை பின்பற்றி வருவார்கள். சிலருக்கு உடல் எடையை குறைக்க நேரம் இல்லாமல் இருக்கும்.
அப்படியானவர்கள் உங்கள் டயட் பிளானில் பச்சைப் பயறை சேர்த்துக் கொண்டால் உடனடியாக உடல் எடையைக் குறைக்கலாம்.
எடையைக் குறைக்கும் பயறு
பச்சைப் பயறில் கலோரிகள் குறைவாக இருப்பதால் அதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதுடன் உடல் எடையையும் குறைக்கலாம்.
பச்சைப்பயறில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு அதிகம் உதவுகிறது. இதனை சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்கும்.
பச்சைப் பயறில் உடலில் இருக்கும் நச்சுக்களை விரட்டும் தன்மை இருக்கிறது. மேலும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கு எடையை இழக்க செய்கிறது.
பச்சைப் பயறில் இருக்கும் வைட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்களும் தாதுக்களும் எடையை குறைக்க நினைப்பதோடு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
இந்தப் பச்சைப் பயறை உட்கொள்வதால் கொழுப்பின் அளவு குறைந்து கொலஸ்ட்ரோல் அளவு கட்டுப்படுத்தப்படும்.
இந்தப் பயறை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் திருப்தியாக உண்ட உணர்வும் எடையை குறைப்பதற்கும் அதிகம் உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |