கொழுப்பு உணவுகளை தவிர்ப்பவர்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படும்? எச்சரிக்கை!
கொழுப்பின் அளவு குறையும் போதும் நம் உடல் செயல்பாடுகள் பாதிப்படையும் வாய்ப்பு உள்ளது. எனவே ஒரு ஆரோக்கியமான உடலுக்கு அத்தியாவசியமான அனைத்து சத்துக்களும் மிகவும் அவசியம். ஆனால், எதை எந்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் இருக்கு சூட்சமம். உங்க உடலில் இரண்டு விதமாக கொழுப்புகள் உள்ளன. இவற்றில் ஹெச்டிஎல் என்பது நல்ல கொழுப்பு இது இதய நோய்கள் வருவதை தடுக்கும். இதுவே எல்டிஎல் என்பது கெட்ட கொலஸ்ட்ரால் இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
எனவே கொழுப்பும் ஒரு விகிதத்தில் இருப்பது அவசியம். அப்போ எப்படி கொழுப்பை சாப்பிட வேண்டும். நல்ல ஆரோக்கியமான கொழுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். என்பதை தெரிந்துகொள்வோம். நல்ல கொழுப்புகள் நல்ல இதய நோய் அபாயத்தை மேம்படுத்த உதவுகிறது. கொழுப்புகளில் உள்ள ஒமேகா 3 அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் இரத்த அழுத்தத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும், உடலில் கொழுப்புகள் இல்லாமல் இருப்பது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
ஒழுங்கற்ற இதயத் துடிப்பை சரி செய்ய உதவுகிறது. நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் விட்டமின்களை உறிஞ்ச கொழுப்புகள் அவசியம் தேவை. கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்களை கொழுப்புகளைக் கொண்டு தான் பெற முடியும்.நீங்கள் கொழுப்பை உணவில் இருந்து தவிர்த்து வந்தால் இந்த விட்டமின்களை எப்படி பெறுவீர்கள். இதனால் பின்னாளில் விட்டமின்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கொழுப்பில் கரையக் கூடிய விட்டமின்களான விட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே இவற்றை உறிஞ்ச கொழுப்புகள் தேவை. இந்த விட்டமின்கள் பற்றாக்குறையால் மாலைக்கண் நோய், கருவுறுதலில் சிக்கல், கூந்தல் வளர்ச்சி பாதிப்படைத ல், தசைகளில் வலி, பற்கள் பலவீனம் போன்றவை ஏற்படுகிறது. ஒருவர் எடையை இழக்க கொழுப்பு இல்லாத உணவை சாப்பிடுவது முற்றிலும் பலனளிக்காது.
காரணம் உணவு சீரணிக்கவும், உங்க பசியை ஆற்றவும் கொழுப்புகள் மிகவும் அவசியம். மேலும், கொழுப்புகள் இல்லாத உணவு உங்க பசியை சரி வர போக்காது. எனவே பசியை ஆற்ற நீங்கள் அதிகப்படியான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே பின்னாளில் உங்க உடல் எடையை அதிகரிக்க காரணமாகி விடும்.
உடலில் போதுமான கொழுப்பு இல்லாவிட்டால் உங்க நோயெதிர்ப்பு அமைப்பு பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.
நோயெதிர்ப்பு சக்தி குறையும் போது உங்களை தாக்கும் நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஏனெனில் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் நோயெதிர்ப்பு செல்கள் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் இந்த செயல்பாட்டில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.