பச்சைப் பயறை ஊறவைத்துதான் சாப்பிடனும்... ஏன் தெரி்யுமா? இனி தெரிஞ்சிக்கோங்க
நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கு தானியங்களில் பச்சைப் பயறும் ஒன்று.
இவற்றில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி , வைட்டமின் ஈ, மெக்னீசியம், தாமிரம், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இந்த அற்புதமான பயறை நாம் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் இன்னும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அனும்பவிக்கலாம்.
ஊறவைத்த பயறின் நன்மைகள்
- முளை கட்டிய பச்சைப் பயற்றில் ஏகப்பட்ட அமினோ அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
- உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் ஊறவைத்த பச்சைப் பயறு உட்கொள்வது அதிக நன்மை பயக்கும்.
- ஊறவைத்த பயறில் சோடியம் குறைவு.
- கொலஸ்ட்ரால் அளவையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க முளை கட்டிய பச்சைப் பயறு உதவும்.
- செரிமானம், கல்லீரல், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.
- பாசிப் பயறை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் அதன் முழு சத்துக்களையும் பெறலாம்.
- எடை குறைக்க நினைப்பவர்கள் ஊற வைத்த பயறை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.
முக்கிய குறிப்பு
பெரும்பாலானவர்கள் சமைப்பதற்கு முன் பயறை கழுவி விட்டு ஊற வைக்காமல் சமைப்பார்கள். இனி இந்த தவறை செய்ய வேண்டாம்.
பயறு போன்ற முழு வகை பருப்புகளை 8 முதல் 12 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
அதேபோல், பாதியாக உடைக்கப்பட்ட பருப்பு வகைகளை 6 முதல் 8 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். இப்படி ஊர வைத்து சாப்பிட்டால் அதன் முழு சத்துக்களையும் பெற முடியும்.