பலரும் அறியாத ரகசியம்: சிறுநீரக கல் பிரச்சினையை எளிதில் தீர்க்கும் உணவு பழக்கங்கள்!
பொதுவாக தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறுநீரக கல் பிரச்சினை அதிகமாக ஏற்படுகிறது. இந்த பிரச்சினை எமது முறையற்ற உணவு பழக்கங்களால் ஏற்படுகிறது.
இதனை கரைக்கப்பதை விட அறுவை சிகிச்சை செய்து நீக்குவதே உடலுக்கு நன்மையளிக்கும்.
இது போன்ற பிரச்சினையுள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் சிறுநீரக பிரச்சினையுள்ளவர்கள் புடலங்காய், சுரைக்காய், பரங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் ஆகிய மரக்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதன்படி, சிறுநீரக கல் வராமல் எவ்வாறு உணவுகளை எடுத்துக் கொள்வது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
சீறுநிரக கல் பிரச்சினையை கட்டுபடுத்தும் வழிமுறைகள்
image - iStock
பொதுவாக சிறுநீரகத்தில் கல் பிரச்சனை இருப்பவர்கள் அதிகமான நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிட வேண்டும். இதனை தினமும் சாப்பிடுவதால் இதன் தாக்கம் குறைவாக இருக்கும்.
வாழைத்தண்டு சாற்றை தினமும் ஒரு குறிப்பிட்டளவு குடிக்க வேண்டும். இது தான் ஆதிகாலம் தொட்டு இந்த பிரச்சினைக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
சிறுநீரக பிரச்சினையுள்ளவர்கள் மருந்துகள் எடுப்பதுடன் திரவ உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது. மீண்டும் நோய் ஏற்படாமல் தடுக்க முடியும்.
காலையில் தினமும் அதிகமான நீர், இளநீர், பழச்சாறு அருந்த வேண்டும். இவ்வாறு செய்வதால் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க முடியும்.
இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், அறுவைசிகிச்சை செய்யப்பட்டவர்கள் மசாலா கலந்த உணவை தவிரக்க வேண்டும். அதாவது நண்டு, மீன் இறால் முட்டையின் வெள்ளைக்கரு பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக கல் பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்ள நினைப்பவர்கள் காபி, தேநீர், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்டளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.