கோடைக்காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
சுட்டெரிக்கும் வெயிலில் போதுமான அளவு தண்ணீர் பருகாமல் இருந்தால், உடல் சோர்வு, தலை வலி, சரும பிரச்சினை, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது போன்ற பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
இதற்கு, தண்ணீர் பருகுவது மட்டுமே தீர்வும் ஆகாது. உண்ணும் உணவுகள் நீர்ச்சத்து கொண்டதாகவும், திரவ வடிவிலான ஊட்டச்சத்து கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
அப்படி, தினமும் 2 லிட்டர் தண்ணீர், கொழுப்பு அளவு குறைவாக கொண்ட பால் ( 300 மி.லி முதல் 400 மி.லி. ) 500 மி.லி. திரவ உணவுகள் போன்றவற்றை உட்கொள்வது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவும்.
மேலும், ஆரஞ்சு, முலாம், தர்பூசணி, வெள்ளரி, பச்சை இலைக் காய் கறிகள், பூசணி, சுரைக்காய் போன்றவை நீர்ச்சத்து அதிகம் கொண்டவை.
பால் மற்றும் பால் பொருட்களும் நீர்ச்சத்து கொண்டவை. ஸ்ட்ராபெர்ரி இந்த பழம் 91 சதவீதம் நீர்ச்சத்தை கொண்டிருக்கிறது.
தொடர்ந்து இதனை சாப்பிட்டு வந்தால் அழற்சி பாதிப்பில் இருந்துவிடுபடலாம். இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய்களில் இருந்தும் தற்காத்துக்கொள்ள உதவும்.
பீச் பழங்கள்
சீனாவை பூர்வீகமாக கொண்ட பீச் பழங்களும் நீர்ச்சத்து நிரம்பப் பெற்றவை. இவற்றுள் வைட்டமின் ஏ, பி மற்றும் சி மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுப்பொருட்களும் இருக்கின்றன.
சருமப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் தரும் ஆற்றலும் இதற்கு உண்டு. கோடை காலத்துக்கு ஏற்ற பழமான இதில் கலோரியும் குறைவாகவே இருக்கிறது.
தக்காளி
தக்காளியில், 94 சதவீதம் நீர்ச்சத்தும், குறைந்த அளவிலான கலோரியும் இருப்பதால் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தக்காளி நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது.
புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் தன்மையும் கொண்டது. இது தவிர எலுமிச்சை சாறு, மோர், இளநீர், மில்க் ஷேக், கரும்புச்சாறு போன்றவற்றையும் கோடை காலத்தில் பருகி நீர்ச்சத்தை தக்கவைக்கலாம்.
ஆரஞ்சு
ஆரஞ்சியில், நார்ச்சத்தும், பல்வேறு ஊட்டச்சத்துக்களும் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லது.
ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கக்கூடியது.