இந்த பழக்கம் இல்லாடியும் கல்லீரல் பாதிப்பு வருமாம்.. அறிகுறிகளை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புக்களில் கல்லீரலும் ஒன்று.
இதில் வரும் பாதிப்புக்களை இலகுவில் கண்டறிய முடியாது.
பார்ப்பதற்கு சிவப்பு-பழுப்பு, ரப்பர் போன்ற அமைப்பில் காணப்படும் இந்த உறுப்பு விலா எலும்புகூண்டின் கீழ் பகுதியில் நன்கு பாதுகாப்பாக இருக்கும். கல்லீரலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது முழு உடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
வழக்கமான செய்யும் செயல்பாடு குறைந்து திசுக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. வலது மற்றும் இடது மடல் என அழைக்கப்படும் கல்லீரலின் இரண்டு பெரிய பிரிவுகள், கணையம் மற்றும் பித்தப்பை ஆகியவற்றுடன் சேர்ந்து உணவு செரிமானம் நடக்கிறது.
செரிமானப் பாதையிலிருந்து வரும் இரத்தம் கல்லீரலை சென்று அடையும் பொழுது நச்சுக்கள் நீக்கப்பட்டு, அவை வளர்சிதை மாற்றங்களுக்கு ஏற்றால் போன்று மாறுகிறது.

அந்த வகையில், கல்லீரில் ஏதாவது பாதிப்பு உள்ளதா? என்பதை சில அறிகுறிகள் வைத்து கண்டறியலாம். அப்படியாயின், கல்லீரலை பாதிப்பு ஏற்பட்ட பின்னர் என்னென்ன அறிகுறிகளை இனங்காணலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
கல்லீரல் பாதிப்பை கண்டறியவது எப்படி?
1. ஒருவர் தொடர்ந்து சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தால் அவர்கள் கல்லீரல் சரியாக இயங்கவில்லை என அர்த்தமாகும். ஏனெனின் கல்லீரல் சரியாக நச்சுக்களின் செயலாக்கத்தை குறைத்து ஆற்றலை அதிகரிக்கும் புரதங்களை உற்பத்தி செய்ய போராடும். இதனால் தான் உடல் முழு நேர ஓய்வுக்கு பின்னரும் சோர்வாக இருக்கும்.
2. வயிற்றின் மேல் வலது பக்கத்தில் வலி அல்லது அசௌகரியமாக இருந்தால் அது கல்லீரல் பிரச்சினைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வலி கூர்மையாகவோ அல்லது மந்தமாகவோ இருந்தால் உங்கள் உணவில் அதிகளவிலான கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. சிலருக்கு இதனால் வயிற்றில் வீக்கம், ஆஸ்கைட்ஸ் போன்றன உருவாகும். எப்போதும் வயிறு நிரம்பியது போன்ற உணர்வும் இதன் அறிகுறிகளில் ஒன்றாக உள்ளது.

3. மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் பிரச்சனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனின் கல்லீரல் பிலிரூபினை சரியாக செயலாக்கம் செய்ய முடியாமல் போகும் நிலை ஏற்படும். இதனால் உங்கள் கண்களில் உள்ள வெள்ளை நிறம் பகுதி மஞ்சள் நிறமாக மாறும். மஞ்சள் கண்கள் கொண்ட ஒருவரை கண்டால் அவர் மருத்துவரை பார்ப்பது சிறந்தது என வலியுறுத்துங்கள்.
4. கல்லீரல் சரியாக செயல்படாத ஒருவருக்கு கழிவுப்பொருட்கள் இரத்த ஓட்டத்தில் படிந்து வெளியேற வாய்ப்பு உள்ளது. உங்களுடைய சிறுநீர் அடர் பழுப்பு அல்லது அம்பர் நிறத்தில் இருந்தால் கல்லீரல் அழுத்தம் அல்லது சேதத்தின் அறிகுறியாகும்.

5. சாப்பிட்ட பின்னர் தொடர்ந்து குமட்டல் மற்றும் வாந்தி வருவது போன்று தெரிந்தால் கல்லீரல் நோய் இருப்பதை உறுதிச் செய்யலாம். ஏனெனின் கல்லீரல் அதிகமான வீக்கம் இருக்கும் பொழுது அது சில செரிமான கோளாறுகளை ஏற்படுத்தி விடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |