காதில் பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்திடாதீங்க

Ear Infections
By Manchu May 08, 2022 05:40 PM GMT
Report

ஐம்புலன்களில் ஒன்றாக இருக்கும் உறுப்பு தான் காது. இந்த கேட்கும் திறனை பெறும் காதில் பிரச்சினை எதனால் ஏற்படுகின்றது? அதற்கான தீர்வு என்ன என்பதையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

காது

இரண்டு காதுகள் எழுத்து உறுப்பு ஒலியைக் கேட்பதற்கு மட்டுமல்ல நாம் நேராக நிற்கவும், தள்ளாடாமல் நடக்கவும் கூட மிக அவசியம். கேட்கும் திறனுக்கும் பேச்சுத் திறனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

குழந்தைக்கு காது கேட்கத் தொடங்கினால் தான், அது பேசத் தொடங்கும். இல்லையென்றால் அதற்குப் பேச்சும் வராது.

மாசடைந்த சூழல், ஒலி மாசு, சுய சுத்தம் குறைவு, மாறிவிட்ட வாழ்க்கை முறைகள் போன்ற பல காரணங்களால் இப்போது காது பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன.

காதில் பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்திடாதீங்க | Ear Infection Symptoms In Tamil

மாம்பழம் சாப்பிட்ட பின்பு இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க! பாரிய பக்கவிளைவு ஏற்படுமாம் 

காதுவலிக்குக் காரணம்

காது நோய்களில் முக்கியமானது, காதுவலி. காதில் கொப்புளம் தோன்றுவது, காதில் சீழ் வடிவது, அழுக்கு அல்லது அந்நியப் பொருட்கள் அடைத்துக் கொள்வது, எறும்பு போன்ற பூச்சி புகுவது, காதில் அடிபடுவது போன்றவற்றால் காதுவலி வரும்.

மூக்கில் சளி பிடிப்பது, மூக்கு ஒழுகுவது, தடுமம் போன்ற மூக்குப் பிரச்னைகளால்கூட காதுவலி வருகிறது. தொண்டையில் சளி பிடித்து புண்  உண்டாவது, டான்சில் வீங்குவது போன்றவையும் காதுவலியும் ஏற்படும்.

காதில் பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்திடாதீங்க | Ear Infection Symptoms In Tamil

குழந்தைகளை பாதிக்கும் தக்காளி வைரஸ்! தக்காளியில் இருந்து பரவுமா? 

காதில் சீழ் வடிந்தால்

காதில் சீழ் வடிவதற்கு முக்கியக் காரணம், ஜலதோஷம்தான். இதன் துவக்கத்தில், மூக்கில் தண்ணீர் மாதிரி சளி கொட்டும். தும்மல் வரும். இ

தைக் கவனிக்கத் தவறினால், மூக்கிலிருந்து மஞ்சள் நிறத்தில் சளி கட்டியாக வரும். இப்போதாவது இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால், இந்தச் சளியில் உள்ள கிருமிகள், தொண்டையையும் நடுக்காதையும் இணைக்கின்ற `ஈஸ்டாக்கியன் குழல்’ (Eustachian tube) வழியாக நடுக்காதுக்குச் சென்று, சீழ் வைக்கும்.

பிறகு அங்குள்ள செவிப்பறையைத் துளைத்துக் கொண்டு வெளிக்காது வழியாக சீழ் வெளியேறும். காதில் சீழ் வடிந்தால், கண்டிப்பாக அது கேட்கும் திறனைப் பாதிக்கும்.

ஆகவே, இதற்கு ஆரம்பநிலையிலேயே மருத்துவ சிகிச்சை பெற்றுவிட வேண்டும். காலம் கடத்தினால், ‘டிம்பனாஸ்டமி’ (Tympanostomy) எனும் அறுவை சிகிச்சை தேவைப்படும்.  

காதில் பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்திடாதீங்க | Ear Infection Symptoms In Tamil

உதட்டின் கருமை நீங்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் இதோ! 

காதில் குரும்பி சேர்ந்தால்

காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். இதற்கு இயற்கை நமக்குத் தந்துள்ள பாதுகாப்பு வளையம்தான், காதுக் குரும்பி (Ear wax).

காதுக்குள் `செருமோனியஸ்’ சுரப்பிகள் (Ceremonious glands) உள்ளன. இவைதான் காதுக்குள் ஒருவித திரவத்தைச் சுரந்து, குரும்பியாக மாறி, செவிப்பறையைப் பாதுகாக்கின்றன.

காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள், அந்நியப் பொருட்கள் போன்றவை செவிப்பறையைப் பாதித்துவிடாதபடி தடுப்பது, இந்தக் குரும்பி தான். இதை அகற்ற வேண்டிய அவசியமில்லை. தானாகவே மெல்ல மெல்ல வெளியில் வந்துவிடும்.

காதில் பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்திடாதீங்க | Ear Infection Symptoms In Tamil

முடி தாறுமாறாக வளர வேண்டுமா? மருதாணியுடன் இந்த எண்ணெய்யை சேர்த்துக்கோங்க 

குரும்பியை (Ear Wax) அகற்றும் முறைகள்

குரும்பியை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால், மூன்று வழிகளில் அதை அகற்றலாம். நம் கண்ணுக்கு எளிதில் தெரியும்படி உருண்டையாகத் திரண்டிருக்கும் குரும்பியை ஊக்கு கொண்டு அகற்றிவிடலாம்.

சிலருக்குக் காதின் உள்புறமாக குரும்பி ஒட்டிக்கொண்டிருக்கும். இவர்களின் காதில் இதற்கென உள்ள காது சொட்டு மருந்து அல்லது தேங்காய் எண்ணெய் சில சொட்டுகள் சில நாட் களுக்கு விட்டால், குரும்பி அதில் ஊறி, தானாகவே வெளியில் வந்து விடும் என்றாலும், நாள்பட்ட குரும்பி இந்த வழியில் வராது.

சிரிஞ்சு மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அகற்ற வேண்டும். இதற்கு மருத்துவர்தான் உதவ வேண்டும்.

காதில் பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்திடாதீங்க | Ear Infection Symptoms In Tamil

பாலில் உள்ள சத்துக்களை விட இதில் தாறுமாறான சத்துக்கள் இருக்காம்! இவ்ளோ நன்மைகளா? 

காது குடைவது

காதுக்குள் ஏதாவது பிரச்னை என்றால், உடனே நாம் கையில் எடுக்கும் பொருள் `பட்ஸ்’தான். காதுக்குள் குரும்பி சேர்ந்தால் பட்ஸ் கொண்டு அதை எடுக்க முயல்கிறோம்.

இந்த முயற்சி, குரும்பியை இன்னும் கொஞ்சம் உள்ளே தள்ளிவிடுமே தவிர, வெளியில் கொண்டுவராது. மாறாக, செவிப்பறையைத் தாக்கிப் புண்ணாக்கிவிடும்.

ஆகவே, கையில் தொடக்கூடாத ஒரு பொருள் உண்டென்றால் அது `பட்ஸ்’தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இன்னும் பலருக்குக் காது குடைவது ஒரு பழக்கமாகவே உள்ளது.

ஊக்கு, ஹேர்பின், பேனா, பென்சில், பலப்பம், தீக்குச்சி, சாவி என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் நுழைத்துக் குடைந்து கொண்டிருப்பார்கள். இந்தப் பழக்கம் நீடித்தால், செவிப்பறை பழுதடைந்து, பின்னொரு நாளில் காது கேட்காமல் போகும்.

காதில் பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்திடாதீங்க | Ear Infection Symptoms In Tamil

பெண்களே! அந்த இடத்தில் அரிப்போ எரிச்சலோ ஏற்படுகின்றதா? என்ன செய்யலாம்? 

காதுக்குள் அந்நியப் பொருள்

காதுக்குள் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், தலையை சாய்த்துப் பொருளைக் கீழே விழ வைக்கலாம் அல்லது மருத்துவரிடம் காண்பித்து அதற்கென உரிய கருவியால் வெளியில் எடுப்பதே நல்லது.

காதில் எறும்பு போன்ற பூச்சி புகுந்திருந்தால், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சில சொட்டுகள் விட்டால், பூச்சி அதில் இறந்துவிடும்.

பிறகு, சில சொட்டுகள் தண்ணீர் விட்டு, தலையை சாய்த்தால் பூச்சி வெளியில் வந்துவிடும். எந்தக் காரணத்தைக் கொண்டும் காய்ச்சிய எண்ணெயைக் காதுக்குள் ஊற்றாதீர்கள். அப்படிச்செய்தால், அது காதைப் பாதிக்கும்.

காதில் பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்திடாதீங்க | Ear Infection Symptoms In Tamil

சர்க்கரை நோயாளிகள் அசைவ உணவுகளை சாப்பிடலாமா? 

காது சொட்டு மருந்து

காதுவலி, காது அடைப்பு, காது இரைச்சல் என்று காதுப் பிரச்னை எதுவானாலும் உடனே காதில் ஒரு சொட்டு மருந்தை ஊற்றிக்கொள்வது சிலருக்குப் பழக்கம்.

இதனால் அவர்களுக்கு ஆபத்துதான் வருமே ஒழிய காதுக்குப் பாதுகாப்பு ஏற்படுவதில்லை. நம் காது எப்போதுமே உலர்ந்த தன்மையுடன் இருக்க வேண்டிய உறுப்பு.

அதில் அவசியமேயின்றி எண்ணெய், சொட்டு மருந்து என்று எதையாவது ஒன்றை ஊற்றி ஈரமாக வைத்திருந்தால், காற்றில் கலந்து வரும் பூஞ்சைக் கிருமிகள் (Fungal infection) அதில் உட்கார்ந்து கொள்ளும்.

அரிப்பை உண்டுபண்ணும். காது அடைத்த மாதிரி தோன்றும். காதுவலி, காதில் சீழ் வடிவது என்று பிரச்னைகள் தொடரும். இறுதியில், காது கேட்பது குறையும்.

ஆகவே, தேவைப்பட்டால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனைப்படி காதில் சொட்டு மருந்து ஊற்றுங்கள். நீங்களாக எந்த மருந்தையும் காதுக்குள் ஊற்றாதீர்கள்.  

காதில் பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்திடாதீங்க | Ear Infection Symptoms In Tamil

காது கேளாமை

அதீத சத்தம் தான் காது கேளாமைக்கு முக்கியக் காரணம். பொதுவாக 80 டெசிபல் சத்தம் வரை கேட்பது ஆபத்தில்லை. 90 டெசிபல் சத்தத்தைத் தினமும் எட்டு மணி நேரத்துக்குக் கேட்கிறோம் என்றால், அது காதைக் கட்டாயம் பாதிக்கும்.

வெடிச் சத்தம் போன்ற 140 டெசிபல் சத்தத்தை சில விநாடிகள் கேட்டாலே காது பாதிக்கப்படுவது நிச்சயம்.

ஆகவே, விமான நிலையம், ஜெனரேட்டர் ஓடுகின்ற தொழிற்சாலைகள் போன்ற சத்தம் மிகுந்த இடங்களில் வேலை செய்பவர்களுக்குக் காது கேட்காமல் போகும் வாய்ப்பு அதிகம்.  

இதனைத் தடுக்க காதில் பஞ்சை வைத்துக் கொள்ளலாம் அல்லது `இயர் பிளக்’ (Ear Plug) பொருத்திக்கொள்ளலாம்.

காதில் பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்திடாதீங்க | Ear Infection Symptoms In Tamil

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிச்சு பாருங்க... இந்த பிரச்சினை எல்லாம் பறந்து ஓடிவிடுமாம்! 

பிறவியிலேயே காது கேளாமை

பரம்பரைக் கோளாறு, நெருங்கிய உறவுமுறையில் திருமணம் செய்துகொள்வது, கர்ப்ப காலத்தில் தாய் சாப்பிடும் சில மாத்திரைகள், கர்ப்பிணிக்குத் தட்டமை வருவது போன்றவை குழந்தைக்குப் பிறவியிலேயே காது கேளாமையை ஏற்படுத்துகின்றன.

கணவருக்கு ஆர்.ஹெச் பாசிட்டிவ் ரத்தமாகவும், மனைவிக்கு ஆர்.ஹெச் நெகட்டிவ் ரத்தமாகவும், குழந்தைக்கு ஆர்.ஹெச் பாசிட்டிவ் ரத்தமாகவும் இருந்தால் அந்தக் குழந்தைக்குப் பிறவிச் செவிடு உண்டாகலாம்.

அடுத்து, குழந்தைக்கு ஏற்படுகின்ற மூளைக்காய்ச்சல் இந்தப் பிரச்னையை உண்டுபண்ணும்.  

பரிசோதனைகள் என்னென்ன?

காது கேளாமையின் விகிதத்தை மதிப்பீடு செய்ய ‘ஆடியோகிராம்’ மற்றும் ‘இம்பெடன்ஸ் ஆடியோமெட்ரி’ (Impedance audiometry) ஆகிய அடிப்படை பரிசோதனைகள் உள்ளன.

காது கேளாமையை இவற்றில் முழுமையாக மதிப்பீடு செய்ய முடியாதபோது, மின் அதிர்வுகளை ஏற்படுத்தி கண்டுபிடிக்கும் ‘பெரா’ (பிரெய்ன் ஸ்டெம் எவோக்டு ரெஸ்பான்ஸ் - Brain stem Evoked Response Audiometry BERA) என்று ஒரு பரிசோதனை செய்யப்படும்.

பாதிக்கப்பட்டவரை உறங்க வைத்து செய்யப்படும் இந்த நவீன பரிசோதனை மூலம் காது கேளாமையை மிகத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை முறைகளைத் தேர்வு செய்யமுடியும்.

காதில் பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்திடாதீங்க | Ear Infection Symptoms In Tamil

காதினை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?

  • அடிக்கடி சளி, ஜலதோஷம் பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • பென்சில், பேனா, பட்ஸ், குச்சி போன்ற பொருட்களை வைத்துக் காதைக் குடையக்கூடாது.
  • குளிர்ந்த நீரும் குளிர் பானங்களும் காதின் பாதுகாப்பைக் கெடுக்கும் என்பதால், இவற்றைக் குறைத்துக் கொள்வது நல்லது. 
  • காதுக்கும் மூக்கிற்கும் தொடர்பு உள்ளது. அடிக்கடி மூக்கை பலமாகச் சிந்தினால் காது கேட்பது குறையும். எனவே, மூக்கை பலமாகச் சிந்தக்கூடாது. 

  •  காதுக்குள் காய்ச்சிய எண்ணெயை ஊற்றக்கூடாது.

காதில் பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்திடாதீங்க | Ear Infection Symptoms In Tamil

  • சைனஸ், டான்சில் போன்றவற்றுக்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • காதுகளில் வாக்மேன், ஹெட்போன் அணிந்தாலும் மிகவும் குறைந்த அளவில் வைத்துக் கேட்க வேண்டும்.
  • சுற்றுவட்டாரத்தில் அதிக இரைச்சல் இருந்தால், காதில் பஞ்சை வைத்துக் கொள்ள வேண்டும்.  
  • தொடர்ந்து செல்போனில் பேச நேரும்போது ஒரு காதிலிருந்து மறு காதுக்கு மாற்றி மாற்றிப் பேசுவது நல்லது
  • சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • தினமும் தியானம் செய்வது காது இரைச்சலைத் தடுக்க உதவும்.
  • மதுவும் புகைப்பிடிப்பதும் காதின் நலனைப் பாதிக்கும். இந்த இரண்டுக்கும் விடைகொடுங்கள்.  

காதில் பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்திடாதீங்க | Ear Infection Symptoms In Tamil

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US