காய்ச்சலின் போது குழந்தைகளுக்கு உலர்திராட்சை கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு காய்ச்சல் நேரத்தில் உலர் திராட்சை கொடுப்பதால் ஏற்படும் நன்மையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உலர் திராட்சை
அதிகமான சத்துக்கள் கொண்ட உலர் பழங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதாகும். அதிலும் உலர் திராட்சை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
குழந்தைகளுக்கு உணவிலிருந்து பெற முடியாத அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை உலர் திராட்சையிலிருந்து கொடுக்கலாம். அந்த அளவிற்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாக இருக்கின்றது.
உலர் திராட்சையில் அதிக அளவு கலோரி, குளுக்கொஸ் மற்றும் பிரக்டோஸ் கொண்டுள்ள நிலையில், எடையை அதிகரிக்கவும் உதவுவதுடன், குழந்தையின் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கின்றது.
மூளைக்கு ஊட்டமளிக்கவும், நினைவாற்றல் மேம்படவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும் செய்கின்றது. மேலும் காய்ச்சல் நேரங்களில் குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையை ஊற வைத்த நீரை கொடுத்தால், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுளை எதிர்த்து போராடவும் உதவி செய்கின்றது.
குழந்தைகளுக்கு எப்போது கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு 8 மாதத்திற்கு பின்பு, அதாவது அவர்கள் உணவை மெல்ல தொடங்கும் போது, திராட்சையை கொடுக்கலாம். அதாவது நீரில் ஊற வைத்து நன்றாக மசித்து கூல் போன்று கொடுக்கவும்.
தினமும் 1 ஸ்பூன் அளவிற்கு சாறு கொடுத்து வரலாம். ஆனால் அவர்களுக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்படுகின்றதா என்பதை கவனித்து பின்பு தொடர்ந்து கொடுக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |