அடேங்கப்பா... குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுத்தால் இவ்வளவு சக்தி கிடைக்குமாம்!
உலர் பழங்களில் முதலிடம் பிடிப்பது திராட்சை தான். அதன் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் என்று அனைவருக்கும் பிடிக்கும். உலர் திராட்சையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. பழங்காலத்தில் வயிற்றுப்போக்கை சரி செய்ய உலர் திராட்சை தான் பயன்படுத்தப்பட்டது. மேலும், வயிற்று நோய்களை தடுப்பதற்கு உலர் திராட்சை பயன்படுகிறது.
சரி... உலர் திராட்சைகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் வாங்க...
1. உலர் திராட்சை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களுடைய ஆரோக்கியம் மேம்படும். மேலும், உலர் திராட்சையில் உள்ள கலோரி, குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் குழந்தைகளுக்கு பல நன்மைகளை கொடுக்கும்.
2. தினமும் உலர் திராட்சையை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளின் உடல் எடை கூடச்செய்யும். மேலும், உடல் வளர்ச்சிக்கு உதவி செய்யும்.
3. தினமும் உலர் திராட்சையை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம், அவர்களின் மூளைக்கு ஊட்டத்தை கொடுக்கும். செரிமானத்தை சீராக்கும்.
4. குழந்தைகளுக்கு உலர் திராட்சை ஊற வைத்த நீரை கொடுத்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், காய்ச்சல், சளி போன்றவை வராமல் தடுக்கும்.
5. குழந்தை பிறந்த பிறகு 8 மாதத்திற்கு பிறகுதான் உலர் திராட்சை கொடுக்க வேண்டும். சிறிய குழந்தைகளுக்கு உலர் திராட்சை ஊறவைத்து கூழ்போல் மசித்து கொடுக்க வேண்டும். அல்லது மிஸ்ஸியில் அரைத்து அந்த விழுதை குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |