பல ஆண்டுகளுக்குப் பின் தீபாவளி நாளில் உருவாகும் 2 ராஜயோகங்கள்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
Diwali 2026 shukraditya and budhaditya rajyog: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 08ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தின்படி, இந்த ஆண்டு தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
காரணம், அன்றைய தினம் சூரியனும் சுக்கிரனும் துலாம் ராசியில் இணைந்து சுக்ராதித்ய ராஜயோகத்தையும், சூரியனும் புதனும் இணைந்து புதாதித்ய ராஜயோகத்தையும் உருவாக்குகின்றன.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் உருவாகும் இந்த இரண்டு ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகங்கள் சிறப்பான பலன்களைத் கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளனர். அத்தகைய அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு தீபாவளி மங்களகரமாக அமையும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றமும், சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வும் கிடைக்கும்.
முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். காதல் திருமணம் கைகூடும் வாய்ப்புள்ளது. பணம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக வருமானத்துக்கான புதிய பாதைகள் திறக்கும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு தீபாவளியில் உருவாகும் ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். நிலுவை வேலைகள் முடிவடையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், நீண்ட நாள் கனவும் நனவாகும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். கூட்டு தொழில் மற்றும் உயர்கல்விக்கான வாய்ப்புகள் உருவாகும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு தீபாவளியில் உருவாகும் ராஜயோகங்களால் மதிப்பு, மரியாதை மற்றும் வெற்றி தேடி வரும்.
பணியிடத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டப்படும். வியாபாரத்தில் நல்ல பலன்களும், எதிர்காலத்தில் லாபம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும்.
புதிய வீடு வாங்கும் கனவும் நனவாகும் வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு தீபாவளி அதிர்ஷ்டமானதாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களும் ஏற்படும்.
திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர நம்பிக்கையும் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். புதிய இலக்குகளை நிர்ணயித்து செயல்படத் தொடங்குவீர்கள்.
குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவதுடன், வருமானம் உயர்ந்து நிதிநிலையும் மேம்படும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் உருவாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |