இதைப்படித்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்! கொத்தமல்லியின் அசரவைக்கும் நன்மைகள்
உணவில் சுவைக்காகவும், மூலிகையாகவும் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது.
சிறு செடி வகையைச் சார்ந்த கொத்தமல்லி செடியானது, 50 செமீ உயரம் வளரக்கூடியது.
சுமார் 7000 ஆண்டுகள் பழமையான இச்செடி மருத்துவ மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது.
கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை, சர்க்கரையின் அளவை குறைப்பதில் தொடங்கி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
சத்துக்கள் என்னென்ன?
நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள கொத்தமல்லியில், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன.
விட்டமின் சி, விட்டமின் கே மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
மேலும் இதில் சிறிதளவு பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், கரோடின் மற்றும் நிகாசின் சத்துக்கள் உள்ளன.
இதில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு பண்புகள் நம் உடலுக்கு பல நன்மைகளை வாரிவழங்குகிறது.
அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்
டைப் 2 நோயாளிகளுக்கான வரப்பிரசாதம் என்றால் அது கொத்தமல்லி தான், இதன் விதைகள் மற்றும் எண்ணெய் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டவை.
எனினும் சர்க்கரை நோயாளிகள் மாத்திரை எடுத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் மருத்துவரிடம் கலந்தாலோசித்து விட்டு கொத்தமல்லியை பயன்படுத்தலாம்.
ஏனெனில் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் போது, கொத்தமல்லியையும் சேர்த்து பயன்படுத்தினால் மேலும் சர்க்கரை அளவு குறையலாம், இதனால் பாதிப்பு உங்களுக்கே என்பதை நினைவில் கொள்ளவும்.
தொப்பையை குறைக்க உதவுமா திரிபலா?
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்
கொத்தமல்லியில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், செல்கள் சேதமடைவதை தடுப்பதுடன் கிருமிகளை எதிர்த்து போராடும்.
குறிப்பாக Terpinene மற்றும் Quercetin பண்புகள், புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை.
நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் செல்கள் வளர்வதை கொத்தமல்லி விதைகள் தடுக்கும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள்
இதயத்தின் நலனை பாதுகாக்கும்
உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதால் இதய நோய்கள் அண்டாமல் பாதுகாப்பு அளிக்கிறது.
அதாவது, நம் உடலில் சேர்ந்த அதிகளவான சோடியத்தை பிரித்தெடுத்து வெளியேற்றும் வேலையை கொத்தமல்லி செய்வதால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
மேலும் கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கிறது, எனவே ரத்த நாளங்கள் சீராக செயல்பட்டு உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
ஊறுகாய் அதிகம் சாப்பிடுவதனால் இந்த பக்கவிளைவுகள் ஏற்படுமாம்!
மூளையை ஆரோக்கியமாக வைக்கிறது
கொத்தமல்லியின் நோய் எதிர்ப்பு பண்புகள் செல்களை பாதுகாப்பதால் பார்கின்சன் மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் வராது.
சமீபத்திய ஆய்வின்படி, மன அழுத்தம், கவலை போன்றவை நம்மை மேலும் பலவீனப்படுத்தமால் இருக்க கொத்தமல்லியை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இதில் உள்ள பண்புகள் நரம்பு செல்களை ஆரோக்கியமாக வைக்கின்றன.
இதனால் மூளை வளர்ச்சி மட்டுமின்றி நினைவுத்திறனும் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சை விட சிவப்பு மிளகாய் நல்லது? தினமும் ஒன்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
செரிமானத்தை மேம்படுத்தும்
கொத்தமல்லி விதைகள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் செரிமானம் முறையாக நடைபெறும்.
இதுமட்டுமல்லாது அடி வயிற்று வலி, வாயுத்தொல்லை மற்றும் வயிறு உபாதைகள் போன்றவற்றிற்கும் கொத்தமல்லி சூப்பரான மருந்தாகிறது.
இதனால் குடலின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
நீரிழிவு நோயாளிகள் சிகப்பு இறைச்சியை சாப்பிடலாமா?
சிறுநீரக செயல்பாடுகளுக்கு
சிறுநீரக தொற்றுகளுக்கு எதிராக போராடும் பண்புகள் கொத்தமல்லியில் அதிகம் நிறைந்திருக்கின்றன.
ரத்தத்தில் இருந்து நச்சுகளை வெளியேற்றும் வேலையை கொத்தமல்லி சிறப்பாக செய்வதால், சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது.
இதன் மூலம் டாக்சின்கள் உட்பட மற்ற கிருமிகளும் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.
வெங்காயம் அதிகமா சாப்பிட்டால் என்ன நடக்கும்?
தினசரி வாழ்வில் எப்படி பயன்படுத்தலாம்?
கொத்தமல்லி டீ: 2 கப் தண்ணீருடன், அரை டீஸ்பூன் அளவு கொத்தமல்லி விதைகளை போட்டு கொதிக்க விடவும், நன்றாக கொதித்ததும் வடிகட்டி குடிக்கலாம். இந்த டீ செரிமானமின்மை, மாதவிடாய் வலி மற்றும் அசிடிட்டிக்கு மருந்தாகும்.
கொத்தமல்லி தண்ணீர்: கொத்தமல்லி சேர்த்த தண்ணீரை தொடர்ந்து உட்கொண்டு வருவது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த தீர்வாகும்.
கொத்தமல்லி எண்ணெய்: வலி உள்ள இடத்தில் கொத்தமல்லி எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் வலிகள் பறந்தோடும், மேலும் இது தலைமுடியின் சீரான வளர்ச்சிக்கும் உதவுகிறது.
டீ குடிக்கும் போது இதை மட்டும் சாப்பிடாதீ்ர்கள்.... ஆபத்து!
முக்கிய குறிப்பு
நட்ஸ் மற்றும் விதைகளால் அலர்ஜி கொண்டவர்கள் கொத்தமல்லி விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போன்று அதிகளவில் கொத்தமல்லியை எடுத்துக் கொள்வது நல்லதல்ல, இது சர்க்கரை அளவை மிகக்குறைவான அளவுக்கு கொண்டுசெல்லக்கூடும்.