தோசைக்கு பக்காவா பொருந்தும் சுவையான ஊறுகாய் - இரண்டு பொருள் இருந்தா போதும்
வீட்டில் காலையில் செய்யும் தோசைக்கு பக்கவாக பொருந்தும் ஒரு ஊறுகாய் செய்முறை பார்க்கலாம்.
தோசைக்கு ஊறுகாய்
தோசைக்கு சைட் டிஷ்ஆக எது இருந்தாலும் ஒரு மூன்று தோசைக்கு மேல் நாம் சாப்பிட முடியாது. ஆனால் இந்த பதிவில் செய்யும் செய்யும் ஊறுகாய் ரெசிபியை செய்தால் வீட்டில் ஒருவருக்கு 10 15 தோசை இருந்தாலும் போதாது. அப்படி என்ன அந்த ஊறுகாயில் இரு்கிறது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடுகு
- வெந்தயம்
- சீரகம்
- வரமிளகாய்
- புதினா
- கொத்தமல்லி
- புளி
- நல்லெண்ணெய்
- உப்பு
- மஞ்சள் தூள்
- பெருங்காயத்தூள்
- மிளகாய்த்தூள்
- நல்லெண்ணெய்
- தட்டிய பூண்டு
- கறிவேப்பிலை
செய்யும் முறை
முதலில் ஊறுகாய்க்கு தேவையான மசாலாப் பொடியைத் தயாரிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தை எடுத்து கடுகு, வெந்தயம், சீரகம், வரமிளகாய் மற்றும் மல்லி ஆகியவற்றை வறுத்து அதை நன்றாக அரைத்து பொடியாக்கி எடுக்க வேண்டும்.
இந்த மசாலா ஊறுகாயின் சுவையை அதிகரிக்க போடுவதாகும். அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணை ஊற்றி புளி, புதினா, மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து, அவற்றின் நீர்ச்சத்து முழுதாக வற்றும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
இதை நன்றாக வதக்கினால் தான் ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமல் இருக்கும். இந்த வதக்கிய பொருட்கள் ஆறியதும், அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் மென்மை தன்மையுடன் அரைத்து எடுக்க வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் மறுபடியும் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், தட்டிய பூண்டு, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
தாளித்த கலவையுடன் அரைத்து வைத்த மசாலாப் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இந்தக் கலவையுடன், ஏற்கனவே அரைத்து வைத்த புதினா பேஸ்ட்டை சேர்த்து, எண்ணெய் தனியாகப் பிரிந்து வரும் வரை நன்கு கிளற வேண்டும். இப்படி செய்தால் புதினா ஊறுகாய் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |