சளி, இருமலை விரட்டும் கஷாயம்: வீட்டிலேயே செய்வது எப்படி?
பொதுவாக பருவ கால மாற்றங்கள் ஏற்படும் பொழுது தொற்றுக்கள் வருவது அதிகமாக இருக்கும்.
தொற்றுக்கள் பரவும் பொழுது பலருக்கும் வைரஸ்கள், மூக்கு அடைப்பு, இருமல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புக்கள் ஏற்படலாம். அதுவும் குழந்தைகளுக்கு மூக்கடைப்பு வந்து அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
சில சமயங்களில் இந்த பிரச்சனை நாள்பட்ட பிரச்சினையாக இருக்கும். அப்படி மூச்சு கூட விட முடியாத நிலையில் இருக்கும் பொழுது ஆங்கில மருத்துவத்தை விட வீட்டில் கஷாயம் செய்து கொடுக்கலாம். இது மூக்கடைப்பு பிரச்சினைகளுக்கு உடனடி நிவாரணியாக இருக்கும்.
மேலும், கஷாயம் குடிக்கும் பொழுது தொண்டை புண்களும் குணமாகும், சுவாச மண்டலத்தை திறம்பட நச்சு நீக்கப்படும் போன்ற பல பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில், இருமல் சளி பிரச்சினைகளுக்கு நிவாரணம் கொடுக்கும் கஷாயம் எப்படி தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- இஞ்சி அல்லது சுக்கு- 1/2 துண்டு
- மல்லி- 1டீஸ்பூன்
- சீரகம்- 1/4 டீஸ்பூன்
- மிளகு- 10
- திப்பிலி- 1/4 இன்ச்
தயாரிப்பு முறை
முதலில் மேற்குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அம்மி அல்லது மிக்ஸியில் போட்டு லேசாக பொடித்துக் கொள்ளவும்.
அதன் பின்னர், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 3 கப் அளவு தண்ணீர் விட்டு பொடித்து வைத்திருக்கும் பொருட்களை ஒன்றாக போடவும்.
சுமாராக 10நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து விட்டு, ஒரு டம்பளரில் வடித்து குடிக்கலாம். இதனை குழந்தைகளாக இருந்தால் கொஞ்சமாக கொடுக்கலாம்.
வெல்லம் சிறு துண்டு கூட சேர்த்து பரிமாறலாம். மழைக்காலங்களில் வரும் இருமல், தொண்டை கரகரப்பு போன்று சளி பிரச்சினைகளுக்கு உடனடி நிவாரணம் இந்த கஷாயம் இருக்கும்.
பலன்கள்
1. கஷாயத்தில் மஞ்சள் மற்றும் மிளகு போன்ற மூலிகைகள் சேர்க்கும் பொழுது அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருக்கும். இதனை காய்ச்சல் நேரங்களில் குடிக்கும் பொழுது சுவாச குழாயில் ஏற்படும் வீக்கம் குறையும்.
2. கஷாயத்தில் மூலிகைகள் சேர்க்கப்படும் பொழுது அது தொண்டை முதல் சுவாச மண்டலம் வரை சுத்தம் செய்யும். இதனால் தான் இருமல் மற்றும் சளி பிரச்சினைகள் குணமடைகிறது.
3. சளி மற்றும் இருமலுக்கான கஷாயம் குடித்த பின்னர், அது உடலுக்குள் சென்று தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது. இதனால் உங்கள் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |