இந்தப் பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கவே கூடாது: ஏன் தெரியுமா?
பொதுவாகவே நம்மில் சிலர் எதை சாப்பிட்டாலும் தண்ணீர் கண்டிப்பாக குடித்தே ஆகவேண்டும். அப்படி அதிக அளவில் ஆன்டிஅக்ஸிடன் உள்ள பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கவே கூடாதாம்.
ஆரோக்கியமான மனிதனுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் பழங்களில் உள்ளது. அதிலும் ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் உள்ளது. ஆனால் இந்தப் பழங்களை எல்லாம் சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் உடலுக்கு நல்லது இல்லை.
பழம் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால்
வாழைப்பழத்தில் மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. அதனால் வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் உடலில் சில பாதிப்புக்கள் ஏற்படும்.
தர்பூசணி பழத்தில் அதிகம் நீர்ச்சத்து இருக்கிறது. இதனால் சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சினை ஏற்படுவது மட்டுமல்லாமல் வயிறு வீக்கத்தையும் ஏற்படுத்தும். மேலும், தர்ப்பூசணி பழத்தை மதிய நேரங்களில் உண்பது நல்லது.
மாம்பழத்தில் அதிக சத்துக்கள் இருந்தாலும் மாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது. ஏனெனில் மாம்பத்தில் உள்ள என்ஸைமஸ் செரிமான அமைப்பை பாதிக்கும்.
பப்பாளி பழத்தை சாப்பிட்டது தண்ணீர் அருந்தக் கூடாது ஏனெனில் பப்பாளி பழத்தில் இருக்கும் பபைன் என்ற என்சைம் இருக்கிறது. அதனால் பப்பாளி சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் வயிறு மந்தமாகுவதோடு வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்தும்.
அன்னாசி பழத்தில் இருக்கும் ப்ரோமேலய்ன் எனும் என்சைம் இருப்பதால் பப்பாளி பழம் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.
ஆரஞ்சு பழத்தை சாப்பிட்ட தண்ணீர் குடித்தால் நெஞ்டிசரிச்சல் பிரச்சினைகள் ஏற்படும்.
ஆப்பிள் பழத்திலும் அதிக நன்மைகள் இருக்கிறது அப்படி இருந்தாலும் ஆப்பிள் பழத்தில் பெக்டின் என்ற நார்சத்து அதிகம் இருப்பதால் ஆப்பிள் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் வயிற்றில் வீக்கம் ஏற்படுவது மட்டுமல்லாமல் மந்தமான உணர்வைக் கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |