பழங்களை சாப்பிட்டு தண்ணீர் குடிச்சா என்ன நடக்கும்: இந்த ஆபத்துக்கள் எல்லாம் தொடருமாம்!
இயற்கை தரும் அறிய பொக்கிஷம் பழங்கள், பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையளிக்கிறது. முக்கியமாக பழங்களில் அதிக அளவில் ஆன்டிஅக்ஸிடன் உள்ளது.
ஆரோக்கியமான மனிதனுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் பழங்களில் உள்ளது. அதிலும் ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் உள்ளது.
ஆனால் இந்தப் பழங்களை எல்லாம் சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் உடலுக்கு தீங்கு இருக்கிறதாம்.
பழத்துடன் தண்ணீர்
பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் பல எதிர் வினைகள் உடலில் நடக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள் அது விரைவில் செரிமானமாகால் வயிற்றில் நீண்ட நேரம் இருந்து ஊட்டச்சத்து உறிஞ்சுதலை கடினமாக்கி நம் ஆரோக்கியத்தை சீர் குலைக்கும்.
சிலர் பழங்களை இரவு தூங்கும் முன்பு சாப்பிடுவதுண்டு. இப்படி இதனை தூங்குவதற்கு முன்பு உட்கொண்டால், அது தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இரவு நேரத்தில் பழங்களை சாப்பிடுவோருக்கு அது அசிடிட்டியை உண்டாக்கும்.
சிலர் பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீரை குடிப்பது வழக்கம் இப்படி குடிப்பது மிகவும் தவறு.
பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கும் போது, வயிற்றுப் போக்கு, வயிற்றில் வலி, வாயு தொல்லை போன்ற பிரச்சனையால் அவதிப்பட நேரிடும்.
ஆப்பிளை சாப்பிடும் போது அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுகிறார்கள். ஆனால் அவ்வாறு சாப்பிடுவது நல்லதல்ல.