எலுமிச்சை தோலை வீணாக குப்பையில் போடுறீங்களா? முடிவளர்ச்சி தாறுமாறாக இருக்குமாம்
எலுமிச்சை தோலை வீணாக தூக்கி வீசாமல் அதனை தலைமுடிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சை தோல்
இன்று நம்மில் பலரும் எலுமிச்சை பழத்தினை பயன்படுத்திவிட்டு அதனை தோலை குப்பையில் தூக்கி வீசி விடுவோம். ஆனால் எலுமிச்சை தோல் முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
எலுமிச்சை தோலில் நிறைந்துள்ள வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், முடியின் வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
இது முடி வளர்ச்சியை தூண்டுவதுடன், எலுமிச்சை தோலில் உள்ள பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை நீக்கும் சக்தியும் இதில் இருக்கிறது.
முடிக்கு எவ்வாறு பயன்படுத்துவது?
தலைமுடியில் அதிக எண்ணெய் அல்லது பொடுகு இருந்தால், எலுமிச்சை தோலை நீரில் கொதிக்கவைத்து, ஆறிய பின் அந்த நீரை தலையில் தடவலாம்.
15 நிமிடங்கள் கழித்து சாதாரணமாக குளித்தால் போதும். இதை வாரம் இருமுறை செய்தால் முடி மிருதுவாகவும் சுத்தமாகவும் இருக்கும்.
இரண்டாவதாக எலுமிச்சை தோலை நன்றாக காய வைத்து தூளாக்கி, அதில் தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, தலையில் தடவினால், முடி உதிர்வைக் குறைத்து வேர்க்கடிவளத்தை மேம்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |