தலையில் கை வைத்தாலே முடி கொத்துக்கொத்தாக கொட்டுதா? அப்போ இது தான் தீர்வு- செய்து பாருங்க
தற்போது மோசமான வாழ்க்கை முறையால் தலைமுடி தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றது.
இதனால் தலைமுடி பிரச்சினையுள்ளவர்கள் தலைமுடி வளர்ச்சிக்கு ஜெரனியம் எண்ணெயை எப்படி பயன்படுத்தவேண்டும் என சில நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இந்த எண்ணெய் ஜெரனியம் தாவரத்தின் பூக்கள், இலை, தண்டு மற்றும வேர்கள் என அனைத்தையும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் எசன்சியல் எண்ணெயாகும். இதனை மற்ற எண்ணெய்களுடன் குறைவான அளவில் கலந்து பயன்படுத்து வேண்டும். இதிலுள்ள எண்ணற்ற பலன்களில் தலைமுடி வளர்ச்சியும் உள்ளடங்கும்.
ஜெரனியம் எண்ணெய் தலைமுடிக்கு பயன்படுத்தும் ஒருவருக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அத்துடன் தலைமுடி அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
அப்படியாயின் ஜெரனியம் எண்ணெய் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஜெரனியம் எண்ணெய் பயன்பாடு
1. எசன்சியல் எண்ணெயான ஜெரனியம் எண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது ஜோஜோ எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம். தலையில் நன்றாக தடவி 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து விட்டு குளித்தால் தலைமுடி வளர்ச்சி அதிகமாகும்.
2. ஜெரனியம் எண்ணெயுடன் நல்ல ஹேர் மாஸ்க்கை கலந்து தலைக்கு தடவி, சரியாக அரை மணி நேரம் ஊறவிட்டு கழுவினால் உங்கள் தலைக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். இதன் விளைவாக தலைமுடி உதிர்வு கட்டுக்குள் வரும்.
3. ஜெரனியம் எண்ணெயில் சில துளிகளை நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவில் கலந்து வைக்க வேண்டும். குளிப்பதற்கு முன்னர் தலைக்கு தடவி நன்றாக ஊற வைத்து விட்டு அலசினால் தலைமுடி வேர்க்கால்கள் ஆரோக்கியம் பெறும்.
4. ஜெரனியம் எண்ணெயில் கேரியர் எண்ணெயை கலந்து வறண்ட மற்றும் அரிப்பு, எரிச்சல் உள்ள இடங்களுக்கு தடவவும். இது தலைக்கு நீர்ச்சத்தை வழங்கி சீபம் உற்பத்தியை முறைப்படுத்தும்.
5. ஜெரனியம் எண்ணெய் பயன்படுத்துவதை நீங்கள் வழக்கமாக கொண்டிருந்தால் ரத்த ஓட்டம் சீராக இயங்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |