கடல் மீன் vs ஆற்று மீன் vs பண்ணை மீன்... எது சிறந்ததுன்னு தெரியுமா? மருத்துவர் விளக்கம்
பொதுவாகவே அசைவ உணவு பிரியர்களின் விருப்பப்பட்டியலில் மீன் வகைகள் முக்கிய இடம் வகிக்கின்றன.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மீன் வகைகளின் பங்கு அளப்பரியது என்பதால், தினசரி உணவில் மீன் வகைகளில் ஏதாவது ஒன்றை நேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் மீன் விரும்பிகள் பலருக்கும் கடல் மீன்கள் சிறந்ததா அல்லது ஆற்று மீன்கள் நல்லதா தற்போது சந்தைகளில் கிடைக்கும் பண்ணை வளர்ப்பு மீன்கள் நல்லதா என்ற சந்தேசம் இருக்கும். இது குறித்து மருத்துவர் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.
எது ஆரோக்கியமானது?
மருத்துவரின் கருத்து பிரகாரம் கடல் மீன்களில், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுக்கு செரிவாக இருக்கும்.

புரதச்சத்து மற்றும் குறைந்த விலையில் மீன்களை பெற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு தேவைப்படுபவர்களுக்கு ஆற்று மீன்கள் சிறந்த தெரிவாக இருக்கும். இந்த மீன்களிலுமே ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிதமான அளவில் இருக்கும்.
அதுவே பண்ணை மீன்களை பார்க்கும் போது, பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கப்படுவதால், அவற்றின் ஊட்டச்சத்து மற்றும் தரம் வளர்க்கப்படும் முறையைப் பொறுத்து மாறுபடும் என குறிப்பிடுகின்றார்.