ஆர்.பி.சவுத்ரியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்
தவெக தலைவரும், நடிகருமான விஜய் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஆர்.பி.சவுத்ரி
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சவுத்ரி நேற்றைய தினம் ராஜஸ்தானில் அரங்கேறிய சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த தருணத்தில் எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சவுத்ரியின் உடல் சென்னை மயிலாப்பூருக்கு கொண்டு வரப்பட்டு அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக இன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜயின் சினிமா பயணத்தில் ஆர்.பி.சவுத்ரியின் பங்கு மிகப்பெரியதாகும். அதாவது பூவே உனக்காக உட்பட பல வெற்றிப்படங்களை விஜய்க்கு தயாரித்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில், தனது கட்சியின் சார்பாக பதவி ஏற்பிற்கு அனைத்து வேலையினையும் செய்து வரும் நிலையில், ஆர்.பி.சவுத்ரியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது விஜய் ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |