நடிகர் ரஜினிகாந்த் இப்படி விரல்களை வைக்க என்ன காரணம்? வெளியாகிய ரகசியம்
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது கைவிரல்களை வைப்பது குறித்த ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
1975ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது வரை வெற்றிப்படங்களை கொடுத்து வருகின்றார்.
பாரதி ராஜா இயக்கத்தில் 16 வயதினிலே திரைப்படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்தார். இவரது ஸ்டைல், பேச்சு என அனைத்துமே தனித்துவமான ஒன்றாகும்.
ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடிக்கும் போது, சாதாரணமான நேரத்தில் கூட தன் கையின் கட்டை விரல் மற்றும் பெருவிரலை சேர்த்து முத்ரா ஒன்றை பின்பற்றுவதை நீங்கள் கவனத்திருக்கலாம்.
இதனை நாம் பல போட்டோக்களிலும், திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். ஆனால் அவர் ஏன் அவ்வாறு செய்கிறார் என்று ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.
சின் முத்ரா
யோகா நிபுணர்கள் கூறுகையில், ரஜினிகாந்த் பின்பற்றும் கை முத்ரா சின் முத்ரா என்றும், இவ்வாறு செய்யும் போது மூளை நரம்புகள் நன்றாக வேலை செய்வதுடன், நினைவாற்றல் அதிகமாகி, மன அழுத்தம், மூளை அழுத்தத்தினை குறைக்கின்றது.
கோபம், தூக்கமின்மை, தலைவலி இவற்றையெல்லாம் நீக்குகிறது. நரம்புகளுக்கு அமைதியை கொடுத்து கவனம் சிதறாமல் வைக்கிறது.
இதனை அறிந்த ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்த் செய்யும் இந்த சின்ன செயலில் இவ்வளவு சக்தி இருக்கிறதா? என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |