பருப்பை வேக வைக்கும் போது வரும் நுரை - இதை சாப்பிடலாமா?
வீட்டில் பருப்பை சமைக்கும் போது அதன் மேலே நுரை வரும் அந்த நுரை பாதுகாப்பானதா இல்லையா என்பதை பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம்.
பருப்பின் மேல் வரும் நுரை
எல்லோரது வீட்டிலும் சைவம் சமைத்தாலும் அசைவம் சமைத்தாலும் பருப்பு ஒரு முக்கிய உணவாக இடம்பெறும். இல்லதரிசிகள் அவர்கள் வசதிற்கேற்றது போல பருப்பை வெவ்வேறு ரெசிபிகளில் செய்வார்கள்.
பருப்பு அனைவரும் சாப்பிட கூடிய சத்தான உணவாகும். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பருப்பை சமைக்கும் போது அதன் மேல் நுரை வரும். எந்த பாத்திரத்தில் சமைத்தாலும் பருப்பில் நுரை வரும்.
பருப்பில் நுரை வந்தால் நமது முன்னோர்கள் அதை நீக்கி விட்டு பருப்பை சுத்தமாக சமைத்து எடுப்பார்கள். ஆனால் நாம் தற்போது இருக்கும் வேலை பிஸி காரணமாக பருப்பை குக்கரில் போட்டு அந்த நுரையை நீக்காமல் சமைத்து அப்படியே சாப்பிடுகிறோம்.
இது உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகளை கொண்டு வரும். இந்த நுரைக்குப் பின்னால் உள்ள அறிவியல் மற்றும் சுகாதார ரகசியங்கள் பற்றி பார்க்கலாம்.

நுரை ஏன் வருகிறது?
பருப்பு வேகும் போது நுரை வருவதற்கு முக்கிய அறிவியல் காரணங்கள் இரண்டு உள்ளது.
1.பருப்பின் வெளிப்புற அடுக்கில் இயற்கையாகவே 'சபோனின்கள்' உள்ளன. இவை சூடான நீரில் கொதிக்கும்போது சோப்பு போன்ற நுரையை உருவாக்குகின்றன. இது பூச்சிகளிடமிருந்து தாவரங்களைப் பாதுகாக்கும் ஒரு இயற்கை பாதுகாப்பு அமைப்பு.
2.பருப்பில் புரதங்கள் நிறைந்துள்ளன. தண்ணீர் கொதிக்கும் போது, இந்த புரத மூலக்கூறுகள் காற்றோடு தொடர்பு கொண்டு நுரையாக மேலே எழுகின்றன.

இப்படி காரணங்கள் இருக்கின்றது எனவே இந்த நுரையை அகற்ற வேண்டுமா என்று கேட்டால் ஆம் நுரை அகற்ற வேண்டும். காரணம் நிபுணர்களின் கூற்றுப்படி.
'இந்த நுரை உடலில் 'யூரிக் அமிலத்தை' அதிகரிக்கிறது. இது மூட்டு வலி மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது' என கூறப்படுகின்றது.
செரிமான பிரச்சனைகள் - பல பெண்கள் பருப்பை சாப்பிடுவதால் வீக்கம் மற்றும் வாயு ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். பருப்பில் உள்ள நுரையில் 'எதிர்ப்பு ஊட்டச்சத்துக்கள்' உள்ளன.
இவை செரிமானத்தில் தலையிடும். நுரையை நீக்கி சமைத்தால் இந்தப் பிரச்சனைகள் குறையும். சுவை: நுரை பருப்பை சிறிது கசப்பாக மாற்றும். அது இல்லாவிட்டால், பருப்பின் சுவை நன்றாக இருக்கும்.

தீர்வு - சமைப்பதற்கு முன் பருப்பை குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். இது சபோனின்களின் விளைவைக் குறைக்கிறது. பருப்பை நேரடியாக குக்கரில் வைப்பதற்கு பதிலாக, முதலில் ஒரு பாத்திரத்தில் வேகவைக்கவும்.
தண்ணீர் கொதித்து மேலே வெள்ளை நுரை உருவாகும்போது, ஒரு கரண்டியால் அதை முழுவதுமாக அகற்றவும். பின்னர் மட்டுமே குக்கரை மூடி வைக்கவும் அல்லது ஒரு கிண்ணத்தில் சமைக்கவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |