Actress Jyothika: 45 வயதிலும் இளமையாக இருக்க காரணம் என்ன?
நடிகை ஜோதிகா தனது 45 வயதிலும் இளமையாக இருப்பதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நடிகை ஜோதிகா
தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம்வரும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் நடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றனர்.
சூர்யா ஜோதிகா இருவரும் காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
திருமணத்திற்கு பின்பு ஜோதிகா குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொண்டு நடிப்பில் இருந்து விலகி இருந்த நிலையில், தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்பு நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.
தற்போது ஜோதிகா தனது குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்லிம்மாக காரணம் என்ன?
முன்பை விட தற்போது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக காணப்படுகின்றார். மிகவும் இளமையாக தோற்றமளிக்கும் இவர், உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளில் மாற்றங்களைச் செய்துள்ளாராம்.
தினமும் ஜிம்மிற்கு செல்வதுடன், கடினமான உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றார். இன்று பெரும்பாலான நபர்கள் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ நினைக்கும் நிலையில், ஆனால் பாதியில் உடற்பயிற்சி இவற்றினை நிறுத்தி விடுகின்றனர்.
ஆனால் ஜோதிகா அவர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக தனது 45 வயதிலும் உடம்பை இளமையாகவும், ஃபிட்டாகவும் வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |