Actress Jyothika: 47 வயதில் வெறித்தனமான உடற்பயிற்சி! வாயடைத்துப் போன ரசிகர்கள்
நடிகை ஜோதிகா ஜிம் ஒன்றில் தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் காட்சியினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடிகை ஜோதிகா
தமிழ் சினிமாவில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை ஜோதிகா. பின்பு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.
இவர் நடிகர் சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிகளுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.

சென்னையில் மாமனார் சிவகுமார் குடும்பத்துடன் வசித்து வந்த ஜோதிகா, குழந்தைகளின் படிப்பிற்காக மும்பைக்கு இடம்பெயர்ந்தார். திருமணத்திற்கு பின்பு பல வருடங்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் நடிப்பில் அசத்தி வருகின்றார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி படங்களிலும் நடித்துவரும் இவர் தற்போது 47 வயதில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் காட்சியினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் கணவர் சூர்யாவையே ஓவர்டேக் செய்துவிடுவார் போல என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |