ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
ஆட்டினுடைய குடல் சமைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் அதை மதலில் சுத்தம் செய்ய வேண்டும். அதை முறைப்படி சுத்தத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆட்டுக்குடல் சுத்தம்
அசைவ பிரியர்கள் நிறைய பேருக்கு ஆட்டுக்குடல் கறி ரொம்பவே பிடிக்கும். ஆனால் அதை எப்படி சுத்தம் செய்வதென்று தெரியாமல் வாங்க மாட்டார்கள். கடையில் வாங்கி சாப்பிட்டாலும், அதை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் வயிற்று உபாதைகள் ஏற்படும்.
ஆட்டு குடலை சுத்தம் செய்யப்போனால் அதன் குடலின் வாய் மிகவும் சின்னதாக இருக்கும். இப்படி சின்னதாக இருப்பதனாலேயே பலர் அந்த குடலை சுத்தம் செய்ய மாட்டார்கள்.
ஆட்டுக்குடலில் மூன்று விதங்கள் இருக்கும். ஒன்று பை போல போர்த்தியிருக்கும். மற்றவை அதன் உள்ளுக்குள் இருக்கும் சிறு குடல் மற்றும் பெருங்குடல் இரண்டு குரல்களும் இருக்கும்.
கறிக்கடைகளில் இந்த மூன்றையும் தனித்தனியாக விற்பனை செய்வார்கள். எனவே, இந்த மூன்றையும் ஒன்றாக வாங்கி சமைத்தால் சுவையாக இருக்கும்.

எப்படி சுத்தம் செய்வது?
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் குடலை போட்டு, பைப் தண்ணீரை திறந்து விட்டு ஓடும் நேரில் சுமார் 4-5 முறை நன்கு அலச வேண்டும்.
பின்னர் சுத்தமான தண்ணீரில் 10 நிமிடங்கள் அப்படியே போட்டு வைக்கவும். இப்படி செய்தால் அதில் இருக்கும் கழிவுகளை சுத்தம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் கொதிக்க கொதிக்க இருக்கும் சுடுத் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த குடல் பையை போட்டு 15 நிமிடம் அப்படியே ஊற வைக்கவும்.
பிறகு அதை எடுத்து கை, கத்தி அல்லது கரண்டியால் மேலே இருக்கும் கருப்பு நிற தோலை நன்கு உரித்தெடுக்கவும். இப்படி செய்தால் முற்றிலும் சுத்தமாகி வெள்ளையாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |