மறந்தும்கூட டீ கூட இதெல்லாம் சேர்த்து சாப்பிடாதீங்க.. ஆபத்து இருக்காம்
டீ இல்லாமல் என் நாளே ஓடாது என்று பலர் கூறிக் கேட்டிருப்போம். அந்தளவு டீ ஒருவரின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது.
காரணம், ஒரு டீயைப் போட்டால்தான் உடலுக்கு கொஞ்சம் தெம்பு வந்ததைப் போல் இருக்கும் என்பது பலரின் கருத்து. சரி டீ குடித்தால் பரவாயில்லை....ஆனால் டீயுடன் சில பொருட்களை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அவை என்னென்ன உணவுகள் என்பதைப் பார்ப்போம்.
image - Healthshots
பால் உணவுகள்
பால் பொருட்களானது, ஒட்சிசனேற்ற பலன்களை குறைக்கிறது. அதாவது, பால் சார்ந்த பொருட்களில் தேநீரில் உள்ள பாலிபினால்களை நடுநிலையாக்கி ஒட்சிசனேற்ற பலன்களை குறைக்கிறது.
வறுக்கப்பட்ட உணவுகள்
பொதுவாகவே தேநீர் ஜீரணத்துக்கு உதவும். ஆனால், வறுத்த உணவுகளானது, செரிமானத்துக்கு சற்று கடினமாக இருக்கும். இதனால் சற்று அசாதாரணமாகவும் மந்தமாகவும் உணர வைக்கும். அதனால் தேநீருடன் வறுக்கப்பட்ட உணவுகளை உண்பது அவ்வளவு நன்மையாக இருக்காது.
image - Asian inspirations
காரமான உணவுகள்
தேநீருக்கென்று ஒரு வகையான நறுமணமும் சுவையும் உண்டு. இந்த நிலையில் காரமான உணவுகளை இதனுடன் உண்ணும்போது அது தேநீரின் நறுமணத்தையும் சுவையையும் கெடுத்து விடுகிறது.
இனிப்பான உணவுகள்
தேநீர் இனிப்பு சுவை நிறைந்தது என்று அனைவருக்கும் தெரியும். இத்துடன் சாக்லெட், கேக், பிஸ்கட் போன்ற உணவுகளை சேர்த்து உண்பதன் மூலம் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இது பல உடல் நலப் பிரச்சினைக்கு வழி வகுக்கும்.
image - Just one cookbook
அமிலத்தன்மை நிறைந்த உணவுகள்
தேநீருடன் அமிலத்தன்மை நிறைந்த உணவுகளை உண்பது உடல் உறிஞ்சக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் அளவை குறைக்கிறது.