எடையை குறைக்கும் ஏலக்காய் டீ...நொடியில் செய்வது எப்படி?
மருத்துவ பயன்களுக்காக பல ஆண்டுகளுக்காக ஏலக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பச்சை ஏலக்காயில் மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
இத்தகைய ஏலக்காயை வைத்து டீ போடுவது எப்படி என்று பார்ப்போம். இந்த டீயை அடிக்கடி பருகினால் கெட்ட கொழுப்பு கரையும் அதிசயம் நடக்கும்.
தேவையான பொருட்கள்
- பால் - 2 டம்ளர்
- தண்ணீர் - 1/2 டம்ளர்
- சர்க்கரை - தேவையான அளவு
- டீ பவுடர் - தேவையான அளவு
- இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
- ஏலக்காய் - 2 (தட்டியது)
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, டீ பவுடர், இஞ்சி, ஏலக்காய் சேர்த்து நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து நன்கு கொதித்த பின் 2 நிமிடம் மிதமான தீயில் மீண்டும் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டினால் இஞ்சி ஏலக்காய் டீ தயார்.