71 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியில் அபூர்வ ராஜயோகம்.... 3 ராசியினருக்கு ஜாக்பாட்
71 Years Diwali After Two Raja Yogam: தீபாவளி தினமான இன்று உருவாகிய அபூர்வ ராஜயோகத்தினால் 3 ராசியினருக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்று இரண்டு ராஜயோகங்கள்
தீபாவளி தினமான இன்று இரண்டு ராஜயோகங்கள் உருவாகியுள்ள நிலையில், ஜோதிட ரீதியாகவும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகின்றது.
லட்சுமி நாராயண ராஜயோகம் மற்றும் புதாதித்ய ராஜயோகம் என்று இரண்டு சுப யோகங்கள் உருவாகியுள்ளதாகவும், இந்த இரண்டு யோகமும் சுமார் 71 ஆண்டுகளுக்கு பின்பு தீபாவளி நாளில் இணைந்து உருவாகியுள்ளது.
இதனால் சில ராசியினருக்கு பொருளாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் சார்ந்த விடயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதன் மற்றும் சுக்கிரன் ஒரே ராசியில் இணைந்திருக்கும் போது இந்த லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது.
புதாதித்ய ராஜயோகமானது சூரியன் மற்றும் புதன் ஒரே ராசியில் இணையும் போது உருவாகின்றது. இந்த ராஜயோகத்தினால் 3 ராசியினர் சாதகமான பலனைப் பெறுகின்றனர்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த காலக்கட்டம் புதிய முயற்சிகளுக்கு சாதகமாக இருக்கும் என்றும், உங்களது சிந்தனைகள் மூலம் புதிய திட்டங்களில் முன்னேறலாம்.
வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்கள் சாதகமாக தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதுடன், முதலீடுகள் தொடர்பான முயற்சிகளிலும் முன்னேற்றம் ஏற்படலாம்.

துலாம்
துலாம் ராசியினரைப் பொறுத்தவரை மூன்று கிரகங்களின் சேர்க்கையினால் திரிகிரக யோகம் உருவாவதாகக் கூறப்படும் நிலையில், தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் மற்றும் அங்கீகாரம் கிடைப்பதுடன், தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் உருவாகவும் வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த இரண்டு ராஜ யோகத்தினால் பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை வழங்கம் என்று கூறப்படுகின்றது. ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருக்கும் பணிகள் நல்ல முடிவுகளையும் கொடுக்க வாய்ப்புள்ளது.
வருமான நிலையும் படிப்படியாக மேம்படுவதுடன், வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான செய்தியும் கிடைக்குமாம்.
முந்தைய காலக்கட்டத்தில் சந்தித்த பொருளாதார சிக்கல்களில் இருந்து, நிவாரணம் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |