Bigg Boss 10: போட்டியாளர்களுக்கு விஜய் சேதுபதி கொடுத்த தீபாவளி பரிசு
Bigg Boss 10 Vijay Sethupathi Diwali Gift to Contestant: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் விஜய் சேதுபதி போட்டியாளர்கள் அனைவருக்கும் புதிய ஆடையை பரிசாக அளித்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
ஆரம்பத்தில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டதுடன், இடையில் வைல்டு கார்டு போட்டியாளர்களும் உள்ளே சென்றனர்.
கடந்த வாரம் விளையாடிய தங்களது இடத்தினை தீர்மானிக்கும் டாஸ்கில் சில போட்டியாளர்கள் தங்களது இடத்தினை தேர்வு செய்யாமல் இருந்ததைக் கேள்வி கேட்டுள்ளார்.

தற்போது 69 நாட்களைக் கடந்த நிலையில் இன்னும் போட்டியாளர்களும் 14 பேர் உள்ளதால் இனிவரும் வாரங்களில் இரண்டு நபர்களாக வெளியே அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுமட்டுமின்றி மிட் நைட் எவிக்ஷன் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இன்று தீபாவளி பண்டிகை என்பதால் போட்டியாளர்கள் வாழ்த்துக்களை கூறுமாறு விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
இதற்கு வினோத் மற்றும் அன்சர் பயங்கரமான நகைச்சுவையுடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு விஜய் சேதுபதி புதிய ஆடையை பரிசாக கொடுத்துள்ளார்.
விஜய்சேதுபதியின் பரிசை அவதானித்த முனியம்மா கேமரா முன்பு தனது கணவரிடம் கண்கலங்க வைக்கும் விதமாக பேசியுள்ளார். விஜய் சேதுபதி முனியம்மா தவிர மற்ற போட்டியாளர்களுக்கு மாடர்ன் உடைகளை எடுத்துக் கொடுத்திருந்தார். முனியம்மாவிற்கு அழகான பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்துள்ளார்.
இதனை வாங்கிக்கொண்ட முனியம்மா உடன்பிறந்த தம்பி மற்றும் அண்ணன் இல்லாமல் இதுவரை வறுத்தப்பட்டுக் கொண்டிருந்ததாகவும், அண்ணனான எனக்கு புடவை எடுத்துக் கொடுத்த விஜய்சேதுபதி அண்ணனுக்கு நன்றியை கூறியதுடன், தனது கணவர் பிள்ளைகளிடம் புடவையை காண்பித்து மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இந்த வாரத்தில் இன்று இரண்டு எவிக்ஷன் இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் அக்ஷிதா, அஸ்மிதா இருவரும் இன்று வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக அஸ்மிதா வெளியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று பார்வையாளர்கள் மகிழ்ச்சியடையும் விதமாக எவிக்ஷன் இருக்கும் எதிர்பார்த்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |