பாய்வீட்டு பிரியாணி செய்ய வேண்டுமா? இந்த முறையில் செய்துபாருங்க
மட்டன் பிரியாணி மணக்க மணக்க பாய்வீட்டு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பிரியாணி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
இன்றைய காலத்தில் நள்ளிரவில் கூட பிரியாணி சாப்பிடுவதற்கு மக்கள் அலைமோதுகின்றனர். அந்த அளவிற்கு பிரியாணியின் சுவை மக்களை கவர்ந்துள்ளது.
அதிலும் விடுமுறை தினம் என்றால் வீட்டில் கட்டாயம் அசைவ உணவாக தான் இருக்கும். அந்த அசைவ உணவு பிரியாணியாகத்தான் இருக்கும். அதிலும் இன்று தீபாவளி என்பதால் பெரும்பாலான வீடுகளில் பிரியாணி தான் செய்து சாப்பிடுவார்கள்.
மேலும் சாதாரணமாக பிரியாணியை விரும்பாமல் பாய்வீட்டு பிரியாணி என்றால் சற்று விரும்பும் கூட்டம் தனியாகவே இருக்கின்றது. தற்போது பாய்வீட்டு பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1/2 கிலோ அல்லது 1 டம்ளர் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)
வேக வைப்பதற்கு
மட்டன் - 3/4 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - 2 கப்
பிரியாணி மசாலாவிற்கு
பட்டை - 2 இன்ச்
கிராம்பு - 6
ஏலக்காய் - 4
ஜாதிக்காய் - சிறிது
கல்பாசி - சிறிது

பிரியாணி தாளிப்பதற்கு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 3
ஏலக்காய் - 4
பெரிய வெங்காயம் - 3 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வேக வைத்த மட்டன்
பெரிய தக்காளி - 3 (நறுக்கியது
உப்பு - சுவைக்கேற்ப
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
அரைத்த பிரியாணி மசாலா
கெட்டி தயிர் - 1/2 கப்
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
தண்ணீர் - 3 டம்ளர்
ஊற வைத்த பாசுமதி அரிசி
எலுமிச்சை - 1
செய்முறை
பிரியாணி செய்வதற்கு பாசுமதி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் கழுவிய மட்டனை சேர்த்து அதில் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், சுவைக்கு ஏற்ப உப்பு 2 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
மிக்ஸியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய், கல்பாசி இவற்றினை சேர்த்து நன்றாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு பிரியாணி செய்வதற்கு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், நெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும். வேக வைத்த மட்டனையும் சேர்த்து 2 நிமிடம் கிளறிவிடவும்.
நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கியதும், மிளகாய் அரைத்த பிரியாணி மாசாலா சேர்த்து நன்றாக கிளறி, இதனுடன் கெட்டியான தயிரையும் சேர்த்து கிளறவும்.
இதனுடன் புதினா, கொத்தமல்லி இவற்றினை சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். இந்த 3 டம்ளர் தண்ணீரில் மட்டன் வேக வைத்த தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளவும்.
தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த பாசுமதி அரிசியை தண்ணீர் வடிகட்டி சேர்த்து, உப்பு சரியாக உள்ளதா என்று பார்த்து, பின்பு எலுமிச்சை சாறு சேர்த்து மூடிவைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
பின்பு இறக்கியதும் தம் போடுவதற்கு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தம் போட்டு இறக்கினால் பாய்வீட்டு பிரியாணி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |