கன்னி ராசிக்குள் நுழையும் சுக்கிரன்... பணக்கஷ்டத்திலிருந்து விடுபடும் 3 ராசிகள்
சுக்கிரன் கன்னி ராசியில் நுழைவதால் பணக்கஷ்டம் நீங்கி மகிழ்ச்சியாக இருக்கும் 3 ராசியினரை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சுக்கிரன் பெயர்ச்சி
ஜோதிடத்தில் நவகிரகங்களில் சுக்கிரன் நேர்மறையான பலன்களை கொடுக்கும் கிரகமாக கருதப்படும் நிலையில், சுக்கிரனின் மாற்றமும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், வசதி என பலன்களை கொடுக்கும் நிலையில், ஒவ்வொரு ராசியினையும் 23 முதல் 28 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவார்.
மேலும் இடைப்பட்ட காலத்திலும் அவர் நட்சத்திரத்தினையும் மாற்றும் நிலையில், தற்போது சிம்ம ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் நிலைபெற்றிருக்கின்றார். நவம்பர் 6ம் தேதி நள்ளிரவு 12.45 மணிக்கு கன்னி ராசிக்கு இடம்பெயர்கின்றார்.
கன்னி ராசியின் அதிபதியாக புதன் விளங்கும் நிலையில், அறிவு, மனம் மற்றும் தகவல்தொடர்பினை குறிக்கின்றதாம். சுக்கிரன் ராசி மாற்றத்தினால் அதிக நன்மையை பெறும் ராசியினரை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த சுக்கிரனின் ராசி மாற்றம் சிறப்பான நன்மையை அளிக்கின்றது. இந்த காலக்கட்டத்தில் உங்களது நிதி நிலை சிறப்பாக இருப்பதுடன், குடும்பத்தில் சுப நிகழ்வும் நடைபெறும்.
தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், பல நன்மைகளும் கிடைக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் உடனடியாக தீர்வுக்கு வந்துவிடுமாம். பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது சிறந்தது.
இக்காலக்கட்டத்தில் திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் சேமிப்பில் இதனை சமாளிக்கமுடியும். சரியான திட்டமிடல் மிகவும் முக்கியம். ஏனெனில் பல்வேறு பிரச்சனையிலிருந்து சிரமம் இல்லாமல் வெளியே வரமுடியும்.

தனுசு
சுக்கிரன் பெயர்ச்சியினால் தனுசு ராசியினர் அதிர்ஷ்டத்தினை பெறுவதுடன், இவர்களின் திறமைகளும் வெளிப்படுமாம். தங்களது வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவீர்கள்.
இவ்வாறு செயல்படுவது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளை வலுப்படுத்துவதுடன், நிதிநிலையும் மேம்பட்டு, நல்ல லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதுடன், வியாபாரத்திலும் புதிய ஒப்பந்தம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
புதிய முயற்சியும் வெற்றிகரமாக முடிவதுடன், இக்காலக்கட்டத்தில் உடல்நலமும் பாதுகாப்பாக இருக்குமாம்.
துலாம்
துலாம் ராசியில் சுக்கிரன் அதிபதியாக இருப்பதால் நேரடியான பலன் கிடைப்பதுடன், புதிய வாகனம் மற்றும் சொத்து வாங்கும் வாய்ப்பும் உள்ளது.
நிதி நிலை கணிசமாக மேம்படுவதுடன், கடன் கொடுத்த பணமும் திரும்ப கிடைப்பதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சி, வேலையில் முன்னேற்றமும் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தத்தினை பெறுவீர்கள்.
உள்நாடு, வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வீர்கள். வேலையில் புதிய பொறுப்புகளைப் பெறுவதுடன், சரியான நேரத்தில் அவற்றினை முடிக்கவும் செய்வீர்கள். பழைய உடல்நலப் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |