குலாப் ஜாமூனுக்கு பிரபலமான கிராமம்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
இனிப்பு வகைகளில் ஒன்றாக இருக்கும் குலாப் ஜாமூனுக்கு பிரபலமான கிராமம் குறித்தும் எவ்வாறு அந்த பெயர் வந்தது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக குலாப் ஜாமூன் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு பெரும்பாலான வீடுகளில் செய்யும் முக்கியமான இனிப்பாகவும் இந்த குலாப் ஜாமூன் இருக்கின்றது.
அவ்வாறு பண்டிகை காலங்களில் செய்யப்படும் குலாப் ஜாமூனுக்கு ஒரு கிராமம் பிரபலமாகியுள்ளது. பலரும் அறிந்திடாத கிராமம் குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.

குலாப் ஜாமூன் கிராமம்
இந்திய மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேசத்தில் லக்கிபூர் கேரி மாவட்டத்தில் உள்ள மைகல்கஞ்ச் என்ற கிராமம் தான் குலாப் ஜாமூனுக்கு பிரபலமான கிராமம் ஆகும்.
டெல்லியையும் லக்னோவைவும் இணைக்கும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த இடத்தில் ஒரு குலாப் ஜாமூன் கடைகள் மட்டுமில்லை. பல கடைகள் இருக்கின்றது.
நாள்தோறும் குலாப் ஜாமூன் செய்யப்படும் இந்த கடைகளுக்கு சென்றால் சுட சுட குலாப் ஜாமூன் சாப்பிடலாம். குடும்பத்திற்கு பார்சலும் வாங்கி செல்கின்றனர்.

எவ்வாறு இந்த பெயர் வந்தது?
குலாப் ஜாமூன் கதை பல ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகின்றது. 1941ம் ஆண்டு கைல்கஞ்ச் கிராமத்தில் தன்பால் மிதாய் பந்தர் என்ற பெயரில் ஒரு கடை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கடையில் தயாரிக்கப்பட்ட குலாப் ஜாமூன் பயணிகளால் விரும்பி சாப்பிட தொடங்கிய நிலையில், அவர்களின் தேவையும் அதிகமாக இருந்ததால் மற்ற கடைகாரர்களும் குலாப் ஜாமூன் விற்பனையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும் 1970ம் ஆண்டுகளில் இந்த இடமானது குலாப் ஜாமூனுக்கு மிகவும் பெயர் பெற்றதாம். இவை சாதாரண இனிப்பு வகை மட்டும் அல்லாமல், உள்ளூர் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிப்பதுடன், அந்த கிராமத்தில் வாழும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகவும் இருக்கின்றது.
இந்த நெடுஞ்சாலையில் சுமார் 25 கடைகள் இருப்பதாகவும், ஆண்டு முழுவதும் இங்கு குலாப் ஜாமூன் விற்பனை செய்யப்படுகின்றது.

குலாப் ஜாமூனின் ஸ்பெஷல் என்ன?
மைகல்கஞ் கிராமத்தில் குலாப் ஜாமூன் தயாரிக்கப்படும் முறையும், பரிமாறப்படும் முறையும் ரொம்ப ஸ்பெஷலாம். அதாவது மண் பானையில் சூடான குலாப் ஜாமூனை பரிமாறுகின்றனர்.
இந்த அனுபவம் மக்களுக்கு மிகவும் புதிதாக இருக்கின்றது. மேலும் இதனை தயார் செய்வதற்கு தேவையான பால் பவுடர், கோதுமை மாவு, மைதா மாவு போன்ற பொருட்களை சரியான அளவில் கலந்து மென்மையாக தயாரிக்கப்படுகின்றது.
சில கடைகளில் நெய்யில் கூட பொரித்து கொடுக்கின்றனர். மேலும் குலாப் ஜாமூன் மென்மையாக வர வேண்டும் என்றால் பொரிக்கும் வெப்பநிலை மற்றும் சரியான பாகு இவைகள் மிகவும் முக்கியம் ஆகும்.
ஆரம்பத்திலேயே எண்ணெய் சூடாக இருந்தால் குலாப் ஜாமூன் கலர் கருப்பாக மாறிவிடுவதுடன், உள்ளே வேகமாகலும் இருக்கும். ஆனால் இவர்கள் நிறத்தை முக்கியமாக நினைத்து பக்குவாக செய்து மக்களை கவர்ந்துள்ளனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |